அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்… அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!
அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
- M.R. ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (அம்பத்தூர், ஆவடி சட்டமன்றத் தொகுதிகள்)
- செஞ்சி சேவல் V. ஏழுமலை, விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் (செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகள்)
- P.துரைபாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், (சிதம்பரம். புலாகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிகள்)
- K சுந்தர்ராஜன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (விருத்தாச்சுவம், திட்டக்குடி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிகள்)
- A.D.N. கோவிந்தன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (பவானி, அந்தியூர், பெருந்துறை சட்டமன்றத் தொகுதிகள்)
- R.பாரப்பன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், (பவானிசாகர், கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றக் தொகுதிகள்)
- C.வினோபாஜி, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (ஒட்டப்பிடாரம், கோயில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகள்)
- P.T, செல்லப்பன், கன்னியாகுமரி மேற்கு பாவட்டக் கழகச் செயலாளர் (பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகள்)
இதையும் படிங்க: கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!
இதேபோல், திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு, திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் தெற்கு என மூன்று மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
- S.B.பசும்பொன், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (பழனி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகள்)
- ப. சுப்பிரமணியன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிகள்)
- வைகை பாலன், திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (நிலக்கோட்டை, நத்தம் சட்டமன்றத் தொகுதிகள்)
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடையா.? இங்க வேலைக்கு ஆகாது.. திருமாவளவனை அலறவிட்ட உயர்நீதி மன்றம்.
மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் சுழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
- அ. மனோகரன், கழக அமைப்புச் செயலாளர்,
- S.R.அஞ்சுலட்சுமி ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர்
- A. சுப்புரத்தினம், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்.
- R.ராஜலட்சுமி, கழக மகளிர் அணிச் செயலாளர்
- டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர், கழக மருத்துவ அணிச் செயலாளர்.
- திருவாலங்காடு G. பிரவீன், கழக மாணவர் அணிச் செயலாளர்
- இமாக்குலீன் ஷர்மிளி, கழக மகளிர் அணி இணைச் செயலாளர்
- E. முத்துக்குமார், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்
- அமலன் சாம்ராஜ் பிரபாகர், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்
- இந்திரா ஈஷ்வர், கழக மகளிர் அணி துணைச் செயலாளர்
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் சுழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.