ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடையா.? இங்க வேலைக்கு ஆகாது.. திருமாவளவனை அலறவிட்ட உயர்நீதி மன்றம்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய வேண்டுமே தவிர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய வேண்டுமே தவிர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது.
நீதி மன்றத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளன.
இதையும் படியுங்கள்: ஓட்டு வாங்கி ஜெயிக்க வக்கு இல்ல.. ஸ்டாலினையே மிரட்டுவாறா.?? அண்ணாமலையை டரியல் ஆக்கிய கே. பாலகிருஷ்ணன்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இட்டுள்ள உத்தரவை திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது, அதற்கு தனி நீதிபதி இளந்திரையன் நேற்று மறுப்பு தெரிவித்து விட்டார்.
பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விடுதலை சிறுத்தைகள் சார்பில் முறையிடப்பட்டது. இம்முறையீட்டை கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு வழக்கில் ஒரு தரப்பாக விசிக இல்லாத நிலையில் தனி நீதிபதி உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கல் செய்ய முடியாது என்றும், இதற்கு மேல்முறையீடு தான் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்: மதம், மதம்னு திரியாமல் அண்ணாமலை இதை பன்னிட்டா அவருக்கே ஓட்டு போடுங்க..? எனக்கு ஓட்டு போட வேணாம்- சீமான்
இந்நிலையில் இன்று மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள்,
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப் பட்டதா, இல்லையா என்பதை ஆராய்ந்து சொல்வதாக கூறினார், பின்னர், உணவு இடைவேளைக்கு முன் இது குறித்து விளக்கமளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், அப்படி செய்தால் அது விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் நீதிபதிகள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் மேல்முறையீடி செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அக்டோபர் 2க்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகளுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.