அன்புத்தம்பி அண்ணாமலை அஞ்சலகத்துறை பணியாளர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட சீமான்,  ஊழியர்களின் பிரச்சனைக்கு அவர் தீர்வு கண்டால் அஞ்சல் துறைபணியாளர்களின் ஓட்டுகள் அனைத்தையும் அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் எனவும் எனக்கு ஒரு ஓட்டு கூட வேண்டாம் என தெரிவித்தார்

காதல் கடிதம் எழுதவில்லை

அஞ்சல் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சலக அலுவலகத்தில் அஞ்சலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசியவர், போராடாத இனமும் மனிதனும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை என தெரிவித்தார். தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் பிரதமருக்கு கடிதம் எழுதக்கூடிய சூழ்நிலைதான் உள்ளதாக தெரிவித்தார். நானும் எனது இளமைப் பருவத்தில் நண்பர்களுக்கு ராணுவத்தில் பணிபுரியக்கூடிய நண்பர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தவர், ஆனால் காதல் கடிதம் எழுதவில்லை என குறிப்பிட்டார்.

இந்தியாவில் உலக பணக்காரர்கள்

மத்திய அரசு தனது தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விமர்சித்தார். அஞ்சல் துறை மற்றும் பொது துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்கள் ஓய்வூதியம் கூட பெற முடியாத நிலையை காணப்படுவதாகவும தெரிவித்தார். 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் உள்ள நாட்டிலேயே உலகத்தின் இரண்டாவது பெரிய பணக்காரன் என்ற நிலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் மத்திய அரசோ நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியது தான் இந்த அரசின் சாதனை என தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமசந்திரனை நீக்கிய இபிஎஸ்...! பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்..?

அண்ணாமலைக்கு ஓட்டு போடுங்கள்

மலை,மணல், நீர் போன்றவற்றையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்யக்கூடிய அன்புத்தம்பி அண்ணாமலை அஞ்சலகத்துறை பணியாளர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர் தீர்வு கண்டால் அஞ்சல் துறைபணியாளர்களின் ஓட்டுகள் அனைத்தையும் அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் எனக்கு ஒரு ஓட்டு கூட வேண்டாம் என தெரிவித்தார். அதை விட்டு மதத்தை பிடித்துக் கொண்டு மதம் என மதம் பிடித்து திரியக்கூடாது என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆர்எஸ்எஸ் தான் தடை செய்ய வேண்டிய ஒரே அமைப்பு..! பி.எப்.ஐ மாற்று பெயரில் செயல்பட வேண்டும் - சீமான் அழைப்பு