அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமசந்திரனை நீக்கிய இபிஎஸ்...! பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்..?

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமசந்திரனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட நிலையில், அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
 

Met Panruti Ramachandran in Chennai and congratulated OPS

அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து தான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ்ம், தான் தான் இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமசந்திரனை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை மக்கள் விரும்பவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவியதாக கூறினார். 

Met Panruti Ramachandran in Chennai and congratulated OPS

பண்ருட்டியாரை நீக்கிய இபிஎஸ்

அதிமுகவில் இதேதலைமை நீடித்தால் நீதி கட்சி எப்படி அழிந்தது அதேபோல் அதிமுகவும் அழிய நேரிடும் என குறிப்பிட்டு இருந்தார்.  இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பற்றி கருத்து கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார். ஒரு கிளைக் கழக செயலாளர் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என்றும் தெரிவித்தவர்.  பண்ருட்டி  ராமச்சந்திரன் சென்ற கட்சிகள் எல்லாம் படுத்தே விட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் அதிமுக அமைப்பு செயலாளரான பண்ருட்டி ராமசந்திரன், அதிமுகவின் அரசியில் ஆலோசகராக நியமிப்பதாக தெரிவித்து இருந்தார்.

சோலார் மின் வேலியில் சிக்கிய சிறுத்தை..! மீட்கச் சென்ற வனத்துறை அதிகாரியை கடித்ததால் பரபரப்பு

Met Panruti Ramachandran in Chennai and congratulated OPS

வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அதிமுகவின் கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமசந்திரடை நீக்குவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று காலை பண்ருட்டி ராமசந்திரன் வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அரசியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்து இப்படி ஒரு பதிலா.? ஆம்னி பேருந்து பிரதிநிதியா சிவசங்கர்- அன்புமணி ஆவேசம்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios