Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்து இப்படி ஒரு பதிலா.? ஆம்னி பேருந்து பிரதிநிதியா சிவசங்கர்- அன்புமணி ஆவேசம்

மக்கள் நலனைக் காப்பது தான் தமிழக அரசின் கடமையாகும். அதற்கு மாறாக, கட்டணக் குறைப்பு  தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அரசு கோரிக்கை வைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Anbumani urged that the Tamil Nadu government should take steps to control omni bus fares
Author
First Published Sep 28, 2022, 12:07 PM IST

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு, கட்டணங்களை குறைக்கும்படி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களை அழைத்து வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த விஷயத்தில் மக்களின் குரலை ஒலிக்க வேண்டிய போக்குவரத்து அமைச்சர், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதியைப் போல பேசி வருவது பெரும் ஏமாற்றமளிக்கிறது. தீபஒளி, பூசை விடுமுறை காலத்திற்கான ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Anbumani urged that the Tamil Nadu government should take steps to control omni bus fares

அதனடிப்படையில் ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சு நடத்திய போக்குவரத்து அமைச்சர்,‘‘ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை. அரசு பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறான ஒரு கண்ணோட்டம். தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் புகாரும் செய்யவில்லை. தனியார் பேருந்துகளின் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். அமைச்சரிடமிருந்து இப்படி ஒரு பதிலை எவரும் எதிர்பார்க்கவில்லை.

மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு..! வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த பாஜக..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

Anbumani urged that the Tamil Nadu government should take steps to control omni bus fares

அமைச்சருடனான பேச்சுக்குப் பிறகும் கூட ஆம்னி பேருந்து கட்டணம் இதுவரை குறைக்கப்படவில்லை. பூஜை விடுமுறைக்காக நாளை மறுநாள் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு அதிகபட்சமாக ரூ.3,870 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபஒளிக்கு முந்தைய  வெள்ளிக்கிழமையான அக்டோபர் ஒன்றாம் தேதி அதிகபட்சமாக ரூ.3,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் ரூ.550 & ரூ.1000 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். வழக்கமாக வசூலிக்கப்படுவதை விட 3 மடங்குக்கும் கூடுதலாக ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. இதை மறைமுகமாகக் கூட அவை வசூலிக்கவில்லை. ஆன்லைனில் வெளிப்படையாக அறிவித்து வசூலிக்கின்றன. அக்டோபர் 20-ஆம் தேதி சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு விமானக் கட்டணமே ரூ.3,523 மட்டும் தான் எனும் போது அதை விட அதிகமாக ஆம்னி பேருந்து கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டணக் கொள்ளையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. 

சோலார் மின் வேலியில் சிக்கிய சிறுத்தை..! மீட்கச் சென்ற வனத்துறை அதிகாரியை கடித்ததால் பரபரப்பு

Anbumani urged that the Tamil Nadu government should take steps to control omni bus fares

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசுக்கு மோட்டார் வாகன சட்டமும்,  சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வளவு அதிகாரங்களை வழங்கியிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மக்கள் நலனைக் காப்பது தான் தமிழக அரசின் கடமையாகும். அதற்கு மாறாக, கட்டணக் குறைப்பு  தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அரசு கோரிக்கை வைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த காலங்களில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக அரசின் அலங்கார ஊர்தி..? குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி கிடைக்குமா..? கெடு விதித்த மத்திய அரசு

 

Follow Us:
Download App:
  • android
  • ios