சோலார் மின் வேலியில் சிக்கிய சிறுத்தை..! மீட்கச் சென்ற வனத்துறை அதிகாரியை கடித்ததால் பரபரப்பு
சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தேனியில் மின் வேலியில் சிக்கிய சிறுத்தையை காப்பாற்ற சென்ற வனக்காவலரை சிறுத்தை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
மின் வேலியில் சிக்கிய சிறுத்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சிறுத்தையினை உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் மற்றும் வனப் பணியாளர்கள் உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுத்தை சோலார் கம்பி வேலியில் இருந்து தானாக தப்பிய நிலையில்,உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனின் கையை கடித்து தாக்கி விட்டு சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
மவுத்தார்கன் இசைத்து நவராத்திரியை கொண்டாடும் ஸ்ரீரங்கம் யானைகள்
வனத்துறை அதிகாரி காயம்
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த உதவி வனப்பாதுகாவலர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்பு தனியார் மருத்துமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பாக இதே பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தபோது வனத்துறையினர் மூலமாக சிறுத்தையைப் பிடிக்க இரண்டு இடங்களில் ஒரு மாத காலமாக கூண்டு வைக்கப்பட்டிருந்தும் சிறுத்தை சிக்காத நிலையில் கூண்டு அகற்றப்பட்டது. இதனிடையே மீண்டும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிறுத்தையை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் மாற்றமா..? சாட்டையை சுழற்றிய மு.க.ஸ்டாலின்