Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் அலங்கார ஊர்தி..? குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி கிடைக்குமா..? கெடு விதித்த மத்திய அரசு

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

The Tamil Nadu Government has released a notification regarding the Republic Day Decoration Car
Author
First Published Sep 28, 2022, 11:21 AM IST

குடியரசு தினம்- அலங்கார ஊர்தி

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தியின் நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக்குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை.  முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். இதனை குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்கள் கண்டு மகிழ்வார்கள்.

அந்தவகையில்  கடந்த 2022ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது.பாரதியார், வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் போன்றவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசின் சார்பாக நடைபெற்ற குடியரசு தின் நிகழ்வில் பங்கேற்க உத்தரவிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடும் செய்திருந்தார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் மாற்றமா..? சாட்டையை சுழற்றிய மு.க.ஸ்டாலின்

The Tamil Nadu Government has released a notification regarding the Republic Day Decoration Car

தேதி குறித்த மத்திய அரசு

இந்தநிலையில், வருகிற ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள குடியரசு தின விழாவில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தயார் செய்ய திட்டமிட்டுள்ள அலங்கார ஊர்திகளின் பட்டியலை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான அலங்கார ஊர்த்களின் மாதிரிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தல். மத்திய அரசின் தேர்வுக்குழு அலங்கார ஊர்திகளின் பட்டியலை இறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு புறக்கணித்த நிலையில் இந்தாண்டாவது அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

சோலார் மின் வேலியில் சிக்கிய சிறுத்தை..! மீட்கச் சென்ற வனத்துறை அதிகாரியை கடித்ததால் பரபரப்பு

 

Follow Us:
Download App:
  • android
  • ios