ஓட்டு வாங்கி ஜெயிக்க வக்கு இல்ல.. ஸ்டாலினையே மிரட்டுவாறா.?? அண்ணாமலையை டரியல் ஆக்கிய கே. பாலகிருஷ்ணன்.
தமிழக முதலமைச்சரை மிரட்டும் விதமாக பேசுகின்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சரை மிரட்டும் விதமாக பேசுகின்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை ஒரு கட்சியின் மாநில தலைவராக அல்லாமல் ஒரு பேட்டை ரவுடியைப் போல பேசுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆசாதரண சூழ்ல் நிலவுகிறது, திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோவை காந்திபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம், கோவை பதட்டமான இடமாக மாறி விடக்கூடாது, அதாவது கோவை அமைதியாக இருக்க ஆர்எஸ்எஸ்-பாஜக விரும்பவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது, அந்த ஆர்பாட்ட மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வரை மிரட்டும் விதமாக பேசியுள்ளார், காவல்துறையை மிரட்டுகிறார். அவர் பாஜக மாநில தலைவராக அல்லாமல் ஒரு பேட்டை ரவுடியை போல பேசுகிறார். 356 ஆவது பிரிவை பிரகடனப்படுத்தி ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவோம் என மிரட்டுகிறார்.
இதையும் படியுங்கள்: திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு..! தலைவர், பொ.செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்
மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார். அரசியல் கட்சி தலைவர் என்ற நாகரீகம் கூட இல்லாமல் பேசுகிறார், இத்தகைய வன்முறை பேச்சை, வெறுப்புப் பேச்சை ஒரு போதும் அனுமதிக்க முடியாது,
இதையும் படியுங்கள்: மதம், மதம்னு திரியாமல் அண்ணாமலை இதை பன்னிட்டா அவருக்கே ஓட்டு போடுங்க..? எனக்கு ஓட்டு போட வேணாம்- சீமான்
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்றே தெரியவில்லை, சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்கள் வரம்புக்குட்பட்டு செயல்படுகின்றனவா என்பது தெரியவில்லை. அதிலும் காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த உள்ளது, காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ன வேலை?
காந்தியை சுட்டுக்கொன்றவர்களுக்கு காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது ஏன், நீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது. அண்ணாமலை காவல்துறை அதிகாரிகளை மிரட்டுகிறார், நாட்டையே முடக்குவோம் என்று பேசுவதையெல்லாம் எப்படி அனுமதிக்க முடியும்.
அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல, ஐபிஎஸ் படித்து வந்துள்ள அரசியல்வாதி, வார்த்தைகளின் வீரியம் தெரிந்துதான் அவர் பேசுகிறார், மாநில காவல்துறையை மிரட்டுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.