திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு..! தலைவர், பொ.செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்
திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் தேர்தல்
திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உட்கட்சித் தேர்தலில் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டது.. இதனையடுத்து வரும் 30 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களின் பட்டியல் அதிகாரப்பூவர்வமாக வெளியிடப்படவுள்ளது. இதே போல திமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்த காரணத்தால் புதிதாக யாரை நியமிப்பது என்பது குறித்தும் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழு தேதி அறிவிப்பு
இந்தநிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதாக தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அக்டோபர் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்கஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்