கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!
இன்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை, அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமசந்திரனின் வீட்டுக்கு சென்று அவரை அண்மையில் சசிகலா சந்தித்தார். அதேபோல மேலும், அடுத்து ஓபிஎஸ்ஸும் பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது பண்ருட்டியார் விமர்சனங்களை அள்ளி வீசினார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பண்ருட்டியாரை அதிமுக அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் நியமித்து உத்தரவிட்டார். சில மணி நேரங்களில் பண்ருட்டி ராமசந்திரனை அதிமுகவிலிருந்தே நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க..அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு !
இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், 'பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.
இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!
பண்ருட்டி ராமச்சந்திரனை நான் சில ஆலோசனை பெற இன்று சந்தித்தேன். அதிமுக துவங்கப்பட்ட நோக்கம் குறித்தும், கட்சியின் கொள்கைகள் குறித்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுவது தனித்துவமாக உள்ளதாகவும், அதனை மக்கள் விரும்பி ரசித்து கொண்டு இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் எம்ஜிஆருடன் இருந்தவர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுடைய ஆசியை பெறுவோம்' என்று கூறினார்.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !