எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சேலம் மாவட்ட நிர்வாகிகள்..! ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து சந்தித்ததால் பரபரப்பு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வேளையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். குறிப்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் சந்தித்து ஆதரவு கொடுத்தனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ்சை சந்தித்த சேலம் மாவட்ட நிர்வாகிகள்
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டி உள்ள சூழலில் அதிமுக பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, சேலம் ரவி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி - எடப்பாடி டீம் ஹேப்பி !
பழைய நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை
மேலும் ஓபிஎஸ் சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது சேலம் மாநகரில் அதிமுக உருவாகிய காலத்தில் இருந்த உறுப்பினர்களுக்கு யாருக்கும் உரிய மரியாதை இல்லை என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து வந்து விரைவில் ஓபிஎஸ்சை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலிருந்து வந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கூறுகையில் ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து ஒதுக்குவது அடிமட்ட தொண்டர்களுக்கு யாருக்கும் பிடிக்காத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், மரியாதை இல்லாத இடத்தில் இருப்பதை தவிர்த்து ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்து அவரை சந்தித்ததாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் சசிகலா ஒன்றிணைவார்களா? டிடிவி.தினகரன் கூறிய பரபரப்பு தகவல்..!