ஓபிஎஸ் சசிகலா ஒன்றிணைவார்களா? டிடிவி.தினகரன் கூறிய பரபரப்பு தகவல்..!
தேனி மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டத்திற்குச் சென்றபோது மாவட்ட எல்லையான ஆண்டிபட்டியில் ஒரு பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவில் இருக்கிறது. அங்கு எப்பொழுதும் இறங்கி வழிபட்டு விட்டுச் செல்வேன். நான் வருவதை தெரிந்து கொண்டு சையதுகான் வந்தார்.
5ஜி ஏலத்தில் ஏதாவது முறைகேடுகள் நடந்திருந்தால் அது நிச்சயமாக வெளியே வரும். கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும். அதனால் வெயிட் பண்ணி பார்ப்போம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- எனது யூகத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும் பொழுது குறிப்பாக சமீபத்தில் என்.ஐ.ஏ ரெய்டு செய்து ஆயுதங்களை, போதை பொருட்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. இதையெல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும் பொழுது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எப்படி ஊழல் பெருக்கெடுத்து ஓடியதோ, ஆடிப்பெருக்கு தண்ணீர் எப்படி பெருக்கெடுத்து ஓடுவதுபோல் திமுக ஆட்சியிலும் ஊழல் பெருகி ஓடி வழிகிறது.
இதையும் படிங்க;- நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !
அமைச்சர்கள் எல்லாம் தப்பித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேனியில் பேசினேன். 5ஜி ஏலத்தில் ஏதாவது முறைகேடுகள் நடந்திருந்தால் அது நிச்சயமாக வெளியே வரும். கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும். அதனால் வெயிட் பண்ணி பார்ப்போம்.
தேனி மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டத்திற்குச் சென்றபோது மாவட்ட எல்லையான ஆண்டிபட்டியில் ஒரு பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவில் இருக்கிறது. அங்கு எப்பொழுதும் இறங்கி வழிபட்டு விட்டுச் செல்வேன். நான் வருவதை தெரிந்து கொண்டு சையதுகான் வந்தார். என்னுடைய பழைய நண்பர் அவர். நான் அன்றைக்கே சொன்னேனே இதில் அரசியலெல்லாம் எதுவும் இல்லை. ஒரு நட்பு ரீதியான சந்திப்பு மட்டும்தான் என்றார்.
இதையும் படிங்க;- அதிமுக வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி - எடப்பாடி டீம் ஹேப்பி !
ஓபிஎஸ் சசிகலாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தேவர் இன அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்களை பற்றி சொன்னார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் அதற்கு பதில் எதுவும் கிடையாது என கூறினார்.