அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கு... தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!!

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

admk general committee appeal case judgment postponed without specifying a date at highcourt

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: கொஞ்சம் கூட மதிக்காத எடப்பாடி பழனிச்சாமி.. ஓபிஎஸ் பக்கம் தாவப்போகும் செல்லூர் ராஜூ..?

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஸ்டாலின்... அளுநரையெல்லாம் பேச விட்டு வேடிக்கை பாக்கலாமா.? பேசாம ராஜினாமா பண்ணுங்க.. சவுக்கு சங்கர் டுவிட்.

அதன்படி இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்பிற்கும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரின் வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக நாளை மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios