கொஞ்சம் கூட மதிக்காத எடப்பாடி பழனிச்சாமி.. ஓபிஎஸ் பக்கம் தாவப்போகும் செல்லூர் ராஜூ..?
இபிஎஸ் தரப்பில் அங்கீகாரம் இல்லாததால் செல்லூர் ராஜு ஓபிஎஸ் பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கியபோதுகூட இது அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்படும் பிரிவு போன்றது, எல்லாம் விரைவில் சரியாகி விடும் என அவர் பேசிவந்த நிலையில் இந்த பேச்சு அடிபடுகிறது.
இபிஎஸ் தரப்பில் அங்கீகாரம் இல்லாததால் செல்லூர் ராஜு ஓபிஎஸ் பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கியபோதுகூட இது அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்படும் பிரிவு போன்றது, எல்லாம் விரைவில் சரியாகி விடும் என அவர் பேசிவந்த நிலையில் இந்த பேச்சு அடிபடுகிறது.
இருக்கும் அரசியல்வாதிகளிலேயே வித்தியாசமானவர், எதார்த்தமானவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜூ, வைகையாற்று நீர் ஆவியாகி விடக்கூடாது என்பதற்காக தெர்மாகோல் பரப்பினார் என்பதற்காக தெர்மாகோல் சயின்டிஸ்ட் என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வருபவர் அவர், ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மதுரையில் தனக்குள்ள செல்வாக்கில் எப்போதும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத வலுவான அரசியல்வாதியாகவே செல்லூர்ராஜூ இருந்துவருகிறார்.
ஆரம்பம் முதலே சசிகலாவின் ஆதரவாளராக அறியப்பட்டவர் அவர், சசிகலா டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது முதல் அவர்களுக்கு எதிராக கடும் சொல் பேசாவாரகவும் இருந்து வருகிறார் செல்லூர் ராஜு, அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும், மிக விரைவில் ஒன்று கூடுவோம் என்றும் அவ்வப்போது பேசியும் வருகிறார்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின்... அளுநரையெல்லாம் பேச விட்டு வேடிக்கை பாக்கலாமா.? பேசாம ராஜினாமா பண்ணுங்க.. சவுக்கு சங்கர் டுவிட்.
இதே போல தான் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போதுகூட இதெல்லாம் அண்ணன் தம்பி பிரச்சினை, ஒரு தொண்டன் கூட கட்சியிலிருந்து செல்லக்கூடாது என்பதே எங்கள் விருப்பம், அம்மா காலத்தில் காளிமுத்து, ஆர்எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டு திரும்பி வந்தவர்கள் தான்,
எடப்பாடி ஓபிஎஸ் பிரிவு அண்ணன் தம்பி போராட்டம் தான், பன்னீர் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம் என்றும் கூறியிருந்தார். இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது, என்ன இருந்தாலும் செல்லூர் ராஜூ தென்மாவட்டத்தைச் சார்ந்த பன்னீரை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் என்று சிலரும், ஆரம்பம் முதலிருந்து சசிகலாவின் அனுதாபியான செல்லூர் ராஜு, பன்னீர்செல்வத்தின் மீது அனுதாபம் காட்டுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றும் பலரும் கூறிவருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் சசிகலா விவகாரத்தில் சாப்ட் கார்னராகவே செல்லூர் ராஜு இன்றளவும் இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: முகத்தை பார்த்தே சாதி கண்டு பிடிப்பேன்.. பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா சஸ்பெண்ட்.
ஒருவேளை செல்லூர் ராஜூ ஓபிஎஸ் பக்கம் சாயப்போகிறாரோ என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் உத்தர வழங்கியுள்ளது, ஓபிஎஸ்சின் அனுமதியில்லாமல் இனி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது, அதேபோல தேர்தல் ஆணையத்தில் கட்சி சின்னம் ஓபிஎஸ் பெயரிலேயே இருந்து வருகிறது, இதனால் ஓபிஎஸ் மீது சாப்ட் கார்னர் காட்டி வந்த செல்லூர் ராஜூ ஓபிஎஸ் தரப்பிடம் அதிக நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
மதுரையில் செல்வாக்கு மிக்க நபராக விலங்கும் செல்லூர்ராஜுவுக்கு இபிஎஸ் தரவில் முக்கியத்துவம் இல்லை, மாற்றாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரையே எடப்பாடி பழனிச்சாமி அதிகம் நம்புகிறார், இதேபோல் நீண்ட நாட்களாகவே ஆர் பி உதயகுமார் செல்லூர் இடையே மதுரை பவர் பாலிடிக்ஸ் நடந்து வருகிறது, இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆர்.பி உதயகுமாரை அங்கீகரித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வரை வழங்கியிருப்பது செல்லூர் ராஜுவை வெறுப்படையச் செய்துள்ளது. இதனால்தான் செல்லூர் ராஜூ ஓபிஎஸ் பக்கம் சாயும் மனநிலையில் இருந்து வருவதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.