ஆ. ராசாவின் தனித் தமிழ்நாடு பேச்சு.. நெருப்புடன் விளையாடாதீங்க.. ஸ்டாலின் விளக்கத்தை கேட்கும் வானதி சீனிவாசன்!

ஆ. ராசாவின் பேச்சை இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வராகி உள்ள ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

A. RaJa's divide Tamil Nadu speech..  Vanathi Srinivasan asks to Stalin's explanation!

நாமக்கல்லில் கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற இந்த மாநாட்டில், திமுக எம்.பி.யும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் ஆ. ராசா பேசியது சர்ச்சையானது. இந்த மாநாட்டில் ஆ. ராசா பேசுகையில், “மாநில சுயாட்சிக்கு உருவம் கொடுத்தவர் அண்ணா. 1974இல் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு வராமல் மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுக்கும் தீர்மானத்தை கருணாநிதி எழுதினார். அதைத்தான் சட்டப்பேரவையில் தீர்மானமாகக் கொண்டுவந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார்.  அதைப் பெற்றுக்கொண்ட இந்திரா காந்தி, இதுபற்றி முழுமையாக ஆராய்வோம் என்று பதில் கடிதம் எழுதினார்.

A. RaJa's divide Tamil Nadu speech..  Vanathi Srinivasan asks to Stalin's explanation!

மாநில சுயாட்சிக்கு கருவாக இருந்தவர் அண்ணா என்றால், அந்த கருவை உருவமாக மாற்றியவர் கருணாநிதி. ஆனால், 1974இல் கொண்டுவரப்பட்ட அந்த உருவத்துக்கு இன்றுவரை உயிரில்லை. தனித் தமிழ் நாடு கோரிக்கையை தள்ளி வைத்துவிட்டுதான் திமுக மாநில சுயாட்சிக்கு வந்தது. ஆனால், பெரியார் சாகும்வரை தனித் தமிழ்நாடு கேட்டு போராடினார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிற நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே (பெரியார்) ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கு மெத்தப் பணிவன்போடு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை ஓயமாட்டோம்” என்று ஆ. ராசா பேசியிருந்தார்.

இதையும் படிங்க: மாநில சுயாட்சி இல்லையென்றால் !! தனி தமிழ்நாடு கேட்போம்.. ஸ்டாலின் முன்னிலையில் மிரட்டல் விடும் ஆ.ராசா..?

ஆ. ராசாவின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி. சூர்யா ஆகியோர் இதற்கு பதிலடி கொடுத்திருந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த 3ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, ''பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடுதான் நம்முடைய கடைசித் தீர்வு என்று பெரியார் சொன்னார்.

A. RaJa's divide Tamil Nadu speech..  Vanathi Srinivasan asks to Stalin's explanation!

ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் ‘அண்ணா’ வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்" என்று ஆ. ராசா பேசியுள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பேச்சு இது ஆகும். மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா எதையும் தெரியாமல் பேசக் கூடியவர் அல்ல. திமுக எப்போதுமே இந்தியா என்ற நாட்டின் ஒற்றுமைக்கு எதிராகவே பேசி வருகிறது. தனித் தமிழ்நாடு எந்நாளும் சாத்தியமற்ற ஒன்று என்பதை திமுகவினர் அறிவார்கள். அதனால்தான், தனித் தமிழ்நாடு கோரிக்கையை திமுக நிறுவனர் அண்ணாதுரை கைவிட்டார்.

இதையும் படிங்க: தனித் தமிழ்நாடு கேட்பீங்க.. ஐந்தே நிமிடத்தில் திமுக ஆட்சி இருக்காது.. பாஜக பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை!

தமிழக இளைஞர்களின் மனதில், பிரிவினை எண்ணத்தையும், இந்திய நாட்டுக்கு எதிரான சிந்தனையையும் விதைக்க வேண்டும். அதன் மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம். அதற்காகவே, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதன் வழியிலேயே, நாமக்கல்லில் ஆ.ராசா, தனி தமிழ்நாடு என பிரிவினைவாதம் பேசியிருக்கிறார். இந்தியாவின் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட, யாராலும் பிரிக்க முடியாது. தமிழகம் என்பது திமுக அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை திமுகவுக்கு வாக்களிப்பவர்களே ஏற்க மாட்டார்கள். தமிழகம் என்றுமே தேசியத்தின் பக்கம்தான். எனவே, நெருப்புடன் விளையாட வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆ.ராசாவின் பேச்சை, இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வராகி உள்ள ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று அறிக்கையில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சியை பிடிக்க முடியாது என்ற விரக்தியில் தமிழகத்தை துண்டாட நினைப்பதா.? பாஜகவை விளாசிய கே. பாலகிருஷ்ணன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios