Asianet News TamilAsianet News Tamil

மாநில சுயாட்சி இல்லையென்றால் !! தனி தமிழ்நாடு கேட்போம்.. ஸ்டாலின் முன்னிலையில் மிரட்டல் விடும் ஆ.ராசா..?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி திமுக எம்.பி ஆ.ராசா பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

DMK MP A.Rasa speech emphasizing the demand for a separate Tamil Nadu
Author
Tamil Nadu, First Published Jul 3, 2022, 3:53 PM IST

நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு என்ற பகுதியில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ”உள்ளாட்சியில் நல்லாட்சி” எனும் தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 12 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

மாநில சுயாட்சி வேண்டும்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் தலைப்பில் எம்.பி ஆ.ராசா பேசினார். அதில் ”தனி தமிழ்நாடு” கோரிக்கை மீண்டும் எழுப்பப்படும் எனும் வகையில் அவர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது அந்த பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:ஓபிஎஸ்-வைத்தியலிங்கம் இடையே கருத்து வேறுபாடு..! புதிய குண்டை தூக்கிப் போட்ட நத்தம் விஸ்வநாதன்

அந்த வீடியோவில்,” எல்லா மாநிலங்களையும் சம அளவில் பார்க்கிறோம் என்றும் பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார் என்று குறிப்பிட்ட அவர், நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிறில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார் என்று பேசினார்.

 

பெரியார் அன்று சொன்னார்:

இந்தியா ஒரு குடியரசு, அதில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சின்ன குடியரசு. முதலமைச்சருக்கோ, ஒன்றிய அமைச்சருக்கோ இல்லாத அதிகாரத்தை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கியிருக்கிறது பஞ்சாயத்து ராஜ் சட்டம். அது போல மாநிலங்களுக்கும்அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பது தான் நம் நோக்கம் என்று அவர் பேசினார்.

பெரியார் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவரது பிறந்த நாளில் விடுதலை நாளிதழிலில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் இந்தியாவில் இருக்கும் வரை இந்து மதம் என்னை சூத்திரனாக வைத்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும்  இந்தியாவில் இருக்கும் வரை என்னுடைய தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது. வேலை வாய்ப்பில் சரி பங்கு கிடைக்காது. எந்த ஏற்றமும் நிகழாது . எனவே நான் முடிவு செய்து விட்டேன். இன்று கலைஞர் முதலமைச்சராக இருக்கிறார். அவர்கள் தங்களை மாநில சுயாட்சி என்று சுருக்கி கொண்டார்கள். ஆனால் நான் சொல்கிறேன். பிரிவினை வேண்டும். தனி தமிழ் நாடு வேண்டுமென்று இளைஞர்களே முன் வாருங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய ஒரே இலக்கு என்று எழுதியதாக ஆ.ராசா பேசினார்.

தனி தமிழ்நாடு :

மேலும் பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகமானது தனி தமிழ்நாடு கோரிக்கையை தள்ளி வைத்துவிட்டு, ஜனநாயகத்திற்காவும் இந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் தந்தை(பெரியார்)யையே ஒதுக்கி வைத்து, இந்தியா வாழ்க என்று சொல்லினோம். சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.அதனால் பிரதமர் மோடியும் அமித்ஷா அவர்களுக்கு மெத்த பணி அன்போடு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில்  செல்ல வைத்துவிடாதீர்கள். எனவே மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்கிறார்.இந்த வீடியோ பலரும் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து,” தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது..? முதலமைச்சர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறாரா..?” எனும் வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
 

மேலும் படிக்க:ராகுல்காந்தி அதிமுககிட்ட ஆதரவு கேட்டரா? கிடையவே கிடையாது... அடித்து சொல்லும் காங்கிரஸ்!!

Follow Us:
Download App:
  • android
  • ios