அட... கணவன் சாப்பிட்ட பின்பு மனைவி சாப்பிட இதுதான்  காரணமாமே..! 

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை, கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும்.

அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான். அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்.

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம். அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம். ஆனால்  இது தெரியாமல்  பலர்  வேறு  வெகு  காரணம் கூறுவார்கள்

கணவன் மனைவிக்குள் இருக்கும் உறவை மேம்படுத்த அவர்களுக்குள்  தேவையானது அன்பும் பாசமும் தான், இருவருக்குள் இருக்கும் தாம்பத்ய வாழ்க்கை முறை அனைத்தும் ஒரு மனைவி தன் கணவனுக்கு அன்பாக சமைத்து கொடுக்கும் உணவில் அடங்கியதே..!