Asianet News TamilAsianet News Tamil

மகா சிவராத்திரியன்று இதை செய்ய மறக்காதீங்க..! 21 தலைமுறையினருக்கும் கிடைக்கப்போகும் அற்புதம்..!

மகாசிவராத்திரி என்பது மாசி மாத தேய்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலை நேரத்திலேயே குளித்துவிட்டு சிவநாமம் ஜெபித்து, நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு, பகல் முழுக்க உண்ணாமலும், இரவு முழுக்க உறங்காமல் இருக்க வேண்டும். மேலும் பெரியவர்கள் உணவு இல்லாமல் இருப்பது கடினம் என்பதால் அவர்கள் பாலும்-பழமும் எடுத்துக்கொள்ளலாம்.

we have to be in fasting for maha sivarathiri
Author
Chennai, First Published Feb 20, 2020, 4:39 PM IST

மகா சிவராத்திரியன்று இதை செய்ய மறக்காதீங்க..! 21 தலைமுறையினருக்கும் கிடைக்கப்போகும் அற்புதம்..! 

ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று விரதம் இருப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் வருகிற சிவராத்திரி அன்று எவ்வாறு நாம் விரதம் இருக்கவேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகாசிவராத்திரி என்பது மாசி மாத தேய்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலை நேரத்திலேயே குளித்துவிட்டு சிவநாமம் ஜெபித்து, நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு, பகல் முழுக்க உண்ணாமலும், இரவு முழுக்க உறங்காமல் இருக்க வேண்டும். மேலும் பெரியவர்கள் உணவு இல்லாமல் இருப்பது கடினம் என்பதால் அவர்கள் பாலும்-பழமும் எடுத்துக்கொள்ளலாம்.

we have to be in fasting for maha sivarathiri

இவ்வாறு விரதம் இருப்பவர்கள் பகலில் சிவாயநம சிவாயநம என்னும் மந்திரங்களை ஜெபிப்பது நன்மை அளிக்கும். இது தவிர்த்து திருவாசகம் மற்றும் பன்னிரு திருமுறை அல்லது தேவாரம் இவற்றை பக்தியுடன் பாடுவது மிகவும் சிறந்தது. அதேபோன்று மகாசிவராத்திரி அன்று இரவு நேரத்தில் நடக்கக்கூடிய நான்குகால அபிஷேகத்தை தரிசனம் செய்துவிட்டு மறுநாள் காலையில் மக்களுக்கு அன்னதானம் வழங்கி விரதத்தை முடித்துக் கொள்வது சிறந்தது. இவ்வாறு விரதம் இருக்கும்போது அவர்கள் வேண்டிக்கொள்ளும் அனைத்து விஷயமும் நடக்கும் என்பது ஐதீகம்.

சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக, அதற்கான பலனை பெறுவார்கள் குறிப்பாக இவ்வாறு விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. அதாவது சொர்க்கலோக பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும். மற்றொரு புறம் எவர் ஒருவர் தொடர்ந்து 24 வருடங்களாக சிவராத்திரி விரதம் இருந்து வருகிறார்களோ அவர்கள் சிவகதியை அடைவதுடன் அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என நம்பப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios