கர்ப்பிணி பெண்கள் கண்ணாடி வளையல் அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான நிகழ்வாகவும். இந்த சமயத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். காலை நோய் முதல் அதிகப்படியான பசி வரை என கர்ப்ப காலத்தில் பெண்கள் பல உடல்நல மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் கண்ணாடி வளையல் அணிவது ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். இது தற்போது ஃபேஷனாக தோன்றினாலும் கர்ப்பிணிகள் கண்ணாடி வளையல் அணிவது அவர்களது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் என்று அறிவியல் கூறுகின்றது. எனவே இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் கண்ணாடி வளையல் அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகள் கண்ணாடி வளையல் அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் :

1. இரத்த ஓட்டம் மேம்படும்

கர்ப்பிணிகள் கண்ணாடி வளையல் அணிவதன் முக்கிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று எதுவென்றால் இரத்த ஓட்டம் மேம்படுவதாகும். ஆம், வளையலானது மணிக்கட்டில் படும்போது லேசான அழுத்தம் ஏற்படும். இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் தூண்டப்படும். உடலில் இரத்தம் சீராக ஓடினால் கை, கால்களில் வீக்கம் குறையும். இது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

2. மூட்டு வலி நீங்கும்

கர்ப்ப காலத்தில் மூட்டு வலி சிலருக்கு வரும். கண்ணாடி வளையல்களை அணிவதன் மூலம் மூட்டுகளுக்கு சிறந்த ஆதரவு கிடைப்பது மட்டுமல்லாமல், வலி மற்றும் அசெளகரியமும் குறையும்.

3. மன அழுத்தம் குறையும்

கர்ப்ப காலம் பல பெண்களுக்கு மன அழுத்த காலமாக இருக்கலாம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உடல் அசெளகரியங்கள் அவர்களது உடல் மற்றும் மனதை பாதிக்கக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் கண்ணாடி வளையல் அணிவதன் மூலம் அதிலிருந்து வரும் இனிமையான ஒலி மனதிற்கு ஒரு விதமான அமைதியை ஏற்படுத்தும். இதனால் மன அழுத்தம், பதட்டம் குறையும். அதுமட்டுமல்லாமல் அந்த ஒலியானது கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஒரு இனிமையான விளைவையும் ஏற்படுத்தும் மற்றும் அமைதியின் உணர்வையும் உருவாக்கும்.

4. ஆற்றல் அதிகரிக்கும்

கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணிகள் சோர்வாக மற்றும் கவலையாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக கடைசி 3 மாதத்தில் இது இன்னும் அதிகமாக இருக்கும். ஆனால் கண்ணாடி வளையல்களை அணிவதன் மூலம் அது மணிக்கட்டில் அக்குபிரஷர் புள்ளிகளை தூண்டி உடலுக்கு வேண்டிய ஆற்றலை அதிகரிக்க செய்யும். மேலும் ஒட்டுமொத்த உயிர் சக்தியையும் மேம்படுத்தும். இதனால் கர்ப்ப காலத்தில் உடல் தேவைகளை எளிதாக சமாளிக்க முடியும்.

5. பிரசவத்திற்கு பிறகான மீட்பு :

பொதுவாக பிரசவத்திற்கு பிறகு பல பெண்கள் தசைவெளியில் உடல் சோர்வை அனுபவிக்கிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் கண்ணாடி வளையல்களை அணிந்தால் அது மணிக்கட்டில் பட்டு கை தசைகளை வலுப்படுத்தும். இதனால் அன்றாட வேலைகளை செய்யலாம். குழந்தையையும் பராமரிக்கவும் எளிதாக இருக்கும்.