Summer Pregnancy Tips : கர்ப்பிணிகளை தாக்கும் கோடை கால பிரச்சினைகள் இவையே..!!
இந்த கோடை வெயில் தாக்கத்தால் கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பல உடல்நலப் பிரச்சினைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தாங்க முடியாத இந்த வெப்பம் மக்களை அசௌகரியத்திற்கு ஆளாக்குவது மட்டுமின்றி பல உடல்நலப் பிரச்சனைகளால் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் கர்ப்பிணிகள் இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியுமா..? கண்டிப்பாக இல்லை.
உண்மையில், கோடை காலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பல வகையான நோய்களும் அவர்களைத் தாக்குகிறது. உதாரணமாக, தலைவலி, தலைசுற்றல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.
கர்ப்ப காலத்தில் கோடைகால பிரச்சனைகள்:
வயிற்றுக்கோளாறு: கர்ப்பிணிகள் கோடை காலத்தில் எல்லா உணவுகளையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில், எல்லாவற்றையும் ஜீரணிக்க முடியாது. குறிப்பாக வறுத்த உணவை சாப்பிட்டால், வயிற்று உபாதை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே, கர்ப்பிணிகள் இந்த பருவத்தில் என்ன, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் அவசியம். முக்கியமாக, பழைய உணவுகளை ஒருபோதும் சாப்பிடவே கூடாது. நினைவில் கொள்ளுங்கள், வயிற்றுக் கோளாறுகள் உங்களை பலவீனமாக்குவது மட்டுமின்றி, குழந்தையை நேரடியாகவும் பாதிக்கும்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களே... முதல் மூன்று மாதங்களில் இந்த தவறுகளை செய்யாதீங்க!!
நீரிழப்பு: கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு எல்லாருக்கும் வருவது பொதுவானது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு ரொம்பவே அதிகம். எனவே, அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம், ஒரு தண்ணீர் பாட்டிலை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். ஒருவேளை, நீங்கள் நீரிழப்பால் பாதிக்கப்பட்டால் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும். இதனால் உங்கள் உடல்நிலை மோசமடையலாம். மேலும், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பமாக இருக்கும் பெண் மயக்கமடைந்து கீழே விழுந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு காயம் ஏற்படுமாம்.
தோல் பிரச்சினைகள்: கோடை காலத்தில் சூரிய ஒளியால் பல வகையான சரும பிரச்சனைகள் வரும். பொதுவாகவே, கர்ப்பிணிப் பெண் என்ன சாப்பிடுகிறாளோ...எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறாளோ..அது அவளுடைய குழந்தையை பாதிக்கும் தெரியுமா.. அதேபோல, ஒவ்வொரு கர்ப்பிணியும் சருமப் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, உங்களுக்கு ஏதேனும் கடுமையான தோல் பிரச்சனை இருந்தால், அது உங்கள் குழந்தையும் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். எனவே, நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம், உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்ளுங்கள். மேலும் தோல் பராமரிப்பு பொருட்களை மிகவும் கவனமாக தேர்வு செய்யுங்கள்.
இதன் மூலம் உங்களையும் உங்கள் குழந்தையையும் சரும ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளே! சர்க்கரை நோய் இருந்தால் ஜாக்கிரதை...குழந்தைக்கு 'இந்த' ஆபத்தான பாதிப்புகள் வரும்!
தலைவலி: இந்த கோடையில் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்களுக்கு தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கும். தலைவலி ஒரு தீவிர பிரச்சனை இல்லை என்றாலும். ஆனால், அது அவர்களுக்கு அசௌகரியமான நிலையை உருவாக்குகிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், தலைவலி நீண்ட காலம் நீடிக்கும். குறிப்பாக, இது எந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கும் நல்லதல்ல.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D