ஆசிய தடகள போட்டியில் முதல் தங்கத்தை வென்று கொடுத்த கோமதி மாரிமுத்துவுக்கு மக்கள் தொடர்ந்து வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

முதல் இடத்தை பிடித்த கோமதி மாரிமுத்து திருச்சியை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து இத்தகைய மாபெரும் சாதனையை செய்துள்ளார் என்றால் நினைத்துப் பாருங்கள். தங்கம் வென்ற பிறகு இந்த உலகம் அவரை உற்றுப் பார்க்கிறது.

இதற்கு முன்னதாக அவருடைய கடின உழைப்பையும் அவர் கடந்து வந்த பாதையையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.  ஒரு சிலர் மட்டுமே குறிப்பாக கோமதி மாரிமுத்துவின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு தெரிவித்து உதவி செய்து வரவே ஒரு கட்டத்தில் இன்று இவ்வளவு பெரிய சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் போது தன் காலில் அணிந்திருந்த ஷூ பிய்ந்து இருந்ததை பார்த்து சமூகவலைதளத்தில் அதுகுறித்த ஒரு போட்டோ பரவலாகப் பார்க்க முடிந்தது. ஒரு காலனி கூட இவ்வளவு பெரிய தங்க மங்கைக்கு வாங்கிக் கொடுக்க முடியாத நிலை தான் இந்தியாவிற்கு உண்டா என அனைவரும் விமர்சனங்களை எழுப்பினர்.

இதற்கிடையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோமதி மாரிமுத்து சொன்ன விவரம் இதுதான். "நான் ஆசிய தடகள போட்டியில் கலந்து கொள்ளும் போது பழைய காலணியை பயன்படுத்தியதற்கு காரணம் அது எனக்கு அதிர்ஷ்டமான காலனி என்பது மட்டுமே...என்னிடம் காலனி இல்லை என்பது உண்மையில்லை. என தெரிவித்தார். இதன் மூலம் பல்வேறு விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கோமதி மாரிமுத்து