ஒரு சில காரியங்களை நம் வாழ்க்கையில் செய்து விட கூடாது என்கிறது புராணம். அதில் குறிப்பாக எம புராணம் என்ன சொல்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட செயலை செய்தால், அதாவது செய்ய கூடாத சிலவற்றை செய்யும் போது மரணம் விரைவில் வரும் என்கிறது எம புராணம்.

அதன்படி, பெரியவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது..!

பெரியவர்களை கண்டுக்கொள்ளாமல் அவர்களுக்கு தேவையான நேரத்தில் உணவு அளிக்காமல் இருப்பது, வீட்டில் சரிவர கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இது போன்ற செயல்களில் ஈடுபடுவது  மிகவும் தவறான ஒன்று

 

கிரகணம் நேரத்தில் விண்ணை பார்ப்பது..

சூரிய ஒளி இல்லாமல் இருக்க முடியுமா..? ஆனால் அதே சூரிய ஒளியை கிரகணத்தின் போது நாம் பார்க்க  கூடாது என்கிறது ஐதீகம்.

கடவுள் நம்பிக்கை 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் கெட்ட காரியங்களில் ஈடுபட நினைக்க மாட்டார்கள். கடவுள் மீது பயம் பக்தி உள்ளவர்கள் நல்வழியில் செல்வார்கள்..ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்பவர்களின் வாழ்நாள் அதிகமாக இருக்காது என்கிறது எமபுராணம் 

நேர்மையான வழி

வழி தவறி செல்பவர்கள், தவறான செயல்களை செய்பவர்கள், அராஜகம் செய்து மற்றவர்களை  ஏமாற்றுபவர்கள், மற்றவர்கள் மனம் புண்படும் படியும், மற்றவர்களின் வாழ்வாதாரத்தை தூக்கி எரியும்  நோக்கில் செயல்படுபவர்களும் இந்த உலகில் அதிக நாள் வாழ தகுதி இல்லாதவர்கள் என கூறுகிறது 

தீயவர்களுடன் பழகுதல் 

இதே போன்று தீய பழக்க வழக்கங்கள், மற்றும் குழந்தை மற்றும் பெண்கள் மீது தவறான எண்ணம் கொண்டவர்கள் இவர்களுடன் பழகுதல் தவறான ஒன்று. கால் மீது கால் போட்டு அமரும் பழக்கம் தவறானதாக உள்ளது

சதுர்த்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி நாட்கள் போன்ற நாட்களில் உடலுறவு செய்வது என்பது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

உறக்கம்
 
தெற்கு மற்றும் தென் மேற்கு திசைகளில் தலை வைத்து உறங்குவது மரணத்தை வரவேற்பதற்கு சமம் என்கிறது  ஐதீகம். முழுவதும் இருள் சூழ்ந்த அறையில் உறங்குவது தவறான ஒன்று. இதே போன்று, உடைந்த கட்டிலில் உறங்குவதும் தவறான ஒன்று. 

தலையில் எண்ணெய் வைப்பது

ஒரு முறை தலையில் எண்ணெய்  வைத்தால், தன் கையில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை உடலில் மற்ற பாகங்களில் தடவிக்கொள்வது தவறானதாக பார்க்கப்படுகிறது. ஒருவரை பற்றி புறம் பேசுதல் மிகவும் தவறானதாக பார்க்கப்படுகிறது.இது போன்ற தவறான வாழ்க்கை செயல்களை செய்பவர்கள் அதிக நாள் இந்த உலகில் வாழ முடியாது என்கிறது எம புராணம்.