வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..! புயலின்  தாக்கம் இப்படி இருக்குமாம்...! 

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதை அடுத்து, அடுத்து வரும் இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் நல்ல மழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி தருமபுரி காஞ்சிபுரம் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அடுத்த 22 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக உருவெடுக்க உள்ளது.

இதன் காரணமாக இலங்கை கடல் பகுதி,இந்தியப் பெருங்கடல் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலமான காற்று வீசக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வரையில் வேகமாக காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 29ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் காரணமாக பெரும் மழை எதிர்பார்க்கக் கூடும் என்ற எச்சரிக்கை வந்துள்ளதால் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது அரசு.