தினமும் இரவு லைட் வெளிச்சத்தில் தூங்குவது நல்லதா? இல்லையா? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தூக்கமென்பது நம் அனைவருக்கும் விருப்பமான மற்றும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால், நாள் முழுவதும் வேலை செய்ததற்கு தேவையான ஓய்வையும், அடுத்த நாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் தூக்கம் தான் நமக்கு வழங்குகிறது. ஆனால் தரமற்ற தூக்கம் ஆரோக்கியத்தில் மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படியிருக்கையில் நீங்கள் தினமும் லைட் வெளிச்சத்தில் தூங்குவதால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இருட்டில் தூங்குவதன் நன்மைகள் :

1. மெலோடினின் சுரப்பு அதிகரிக்கும்

வெளிச்சம் ஏதும் இல்லாமல் இருளில் தூங்கும் போது உடலில் மெலோடோனின் சுரப்பானது அதிகரிக்கும். மெலோடினின் சுரப்பு என்பது நல்ல தூக்கத்தை வழங்குவது மட்டுமல்லாமல் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படும்.

2. மூளையை கூர்மையாகும் :

மெலோடினின் சுரப்பு அதிகரிக்கும் போது மூளையில் இருக்கும் பைனல் சுரப்பு வலுவாகும். மூளையை கூர்மையாக செயல்பட இது உதவுகிறது. அல்சைமர், இன்சோம்னியா போன்ற ஆபத்தான நோய்கள் வருவதை தடுக்க இந்த மெலோடினின் உதவுகிறது.

3. தளர்வான ஆடை ;

நீங்கள் இரவு தூங்கும் போது தளர்வான ஆடைகளை அணிந்து தூங்குவது தான் நல்லது. இறுக்குமான ஆடைகளை அணிந்தால் உடலில் மெலடோனின் சுரப்பானது குறையும்.

லைட் வெளிச்சத்தில் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் :

1. ஹார்மோன்கள் சமநிலையின்மை

தினமும் இரவு லைட் வெளிச்சத்தில் தூங்கினால் அவற்றில் இருந்து வரும் புறாஊதா கதிரானது உங்களது உடலில் இருக்கும் மேலோட்டினின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

2. இதயம் பாதிக்கப்படும் :

லைட் வெளிச்சத்தில் தூங்கினால் ஹார்மோன்கள் சமநிலையின்மை ஏற்படுவது மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எப்படியெனில் லைட் வெளிச்சத்தில் தூங்கும் போது நிம்மதியான தூக்கம் கிடைக்காது. இரவு சரியாக தூங்கவில்லையெனில், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயம் பாதிப்படையும்.

3. புற்றுநோய் ஏற்படும் :

தினமும் இரவு வெளிச்சத்தில் தூங்குவது மூளையை பாதிப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளன.

குறிப்பு :

ஒருவேளை உங்களால் வெளிச்சம் இல்லாமல் தூங்க முடியவில்லை என்றால், நீங்கள் சிவப்பு நிற லைட்டை பயன்படுத்தலாம். ஏனெனில் மற்ற நிறத்தைவிட சிவப்பு நிற வெளிச்சத்தில் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.