வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம்..... மத்திய அரசு நடவடிக்கை

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்க மத்திய  அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2015ல் தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் மற்றம் அங்கீகார திட்டத்தின்கீழ், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டது. சுமார் 32 கோடி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்தது. அந்த நேரத்தில் ஆதார் பயன்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கட்டுபாடு விதித்ததால், தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணியை கைவிட்டது.

இந்நிலையில் தற்போது ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்க மத்திய சட்ட அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்ய சட்ட அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வைக்கப்பட வேண்டிய குறிப்பில் தற்போது அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதால் போலி வாக்காளர்கள் பதிவுகள் நீக்கப்படும். மேலும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலை தூரத்தில் இருந்தாலும் வாக்கு அளிக்கும் உரிமையை அளிக்கும். தற்போதைய நடைமுறையின்படி, புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தாங்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட தொகுதியில் இருந்தால் மட்டுமே அவர்கள் வாக்களிக்க முடியும்.