Asianet News TamilAsianet News Tamil

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

இவிஎம் விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

Supreme Court to pronounce verdict on EVM VVPAT Paper slip acknowledgement case likely today smp
Author
First Published Apr 24, 2024, 10:04 AM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் வாக்கை செலுத்தியதும், 7 விநாடிகளுக்கு விவிபேட் ஒப்புகை சீட்டில் வாக்காளர் பதிவான தங்கள் வாக்கை சரி பார்க்க முடியும்.

மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதேபோல், தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, “2019 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள தரவுகளை மாநிலம் வாரியாக பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, சுமார் 373 தொகுதிகளில் முரண்பாடுகள் இருந்துள்ளதை சில தனியார் நிறுவனங்கள் என கண்டறிந்துள்ளன.  காஞ்சிபுரம், மதுரை,  தர்மபுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன்,  எண்ணிப்பட்ட வாக்குகளுடன் பொருந்தி வரவில்லை.” என முக்கியத்துவம் வாய்ந்த வாதங்களை மனுதாரர் தரப்பு முன்வைத்தது.

Andhra pradesh Election 2024: 41 சதவீதம் உயர்ந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சொத்து மதிப்பு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் விவிபேடு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.

இந்த நிலையில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இதன் மீதான தீர்ப்பை வழங்கவுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios