Asianet News TamilAsianet News Tamil

முட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா...அடடே! இதுவரை தெரியாம போயிடுச்சே?

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Benefits of eating egg!
Author
Chennai, First Published Jan 7, 2022, 2:43 PM IST

முட்டை, ஏழை எளிய மக்களின் வாழ்வோடு தினசரி கலந்திருக்கும் ஒரு உணவு. அசைவம் சாப்பிட முடியாமல் வசதி குறைவாக ஏழைகள் மட்டுமில்லாமல் அனைவராலும் விரும்பப்படும் இந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது. ஏன் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணத்தை விரிவாக பார்ப்போம். 

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நண்மைகள்:

முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். எனென்றால் முட்டையில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. 

Benefits of eating egg!

எப்படி உட்கொள்வது?

முட்டையைச் சப்பாத்தி ரோலாகவோ பொரியலாகச் செய்து சாதத்துடன் கலந்தோ சாப்பிடலாம். முட்டை கிரேவியாக அல்லது காய்கறிகளுடன் கலந்தும் சாப்பிடலாம். ஆம்லெட்டாகச் செய்து உட்கொள்ளலாம். ஆனால், முட்டையைப் பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ, வேகாத மஞ்சள் கருவாகவோ உட்கொள்ளக் கூடாது.

சிலருக்கு மாலை வேளையில் முட்டை பப்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த முட்டை பப்ஸ் விஷயத்தில் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். சில கடைகளில் காலையில் செய்த பப்ஸையே மாலை வரை வைத்திருந்து விற்பார்கள். அந்த பப்ஸில் இருக்கும் முட்டை மாலைக்குள் நிச்சயம் கெட்டுப்போய், சாப்பிடத் தகாததாக ஆகியிருக்கும். எனவே, ஆரோக்கியம் காக்க விரும்புகிறவர்கள் கடைகளில் விற்கப்படும் முட்டை பப்ஸை பார்த்து சாப்பிடுவது நல்லது.

யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?

முட்டையிலிருக்கும் கோலின் சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தை, மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உதவும். பொதுவாகவே வளரும் குழந்தைகள், தினமும் ஒரு முட்டையைப் பாலுடன் சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அதிகம் சாப்பிட கூடாதவர்கள்:

Benefits of eating egg!

அதிக எடையோடு இருப்பவர்கள், உடலில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை முட்டை சாப்பிட்டால் போதுமானது. ஆனால், அவர்களும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. அதிலும் பிராய்லர் கோழி முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகளே சிறந்தவை. அதுமட்டுமின்றி, உடல் உழைப்பு அதிகம் செய்யாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது சிறந்த ஒன்று. ஏனெனில் அதிகப்படியான முட்டை சாப்பிடுதல் என்பது அவர்களுக்கு அதிக கொழுப்பை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முட்டை மிக சிறந்த ஒரு உணவுப்பொருள்.

சாப்பிடும் நேரம் அவசியம்:

சாப்பிடும் நேரம் மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் முட்டை உட்கொள்வது சிறந்தது. மதியம் உட்கொள்பவர்கள், அது சமைக்கப்பட்ட நேரத்தை அறிந்துகொண்டு சாப்பிட வேண்டும். சமைத்து வெகு நேரமான முட்டையைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. இரவில் சாப்பிட்ட பிறகு, நம் உடல் உழைப்பு மிகவும் குறைவாக இருக்கும். எனவே, இரவில் முட்டை சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios