இன்றைய நவீன கால கட்டத்தில், தொப்பை மற்றும் தொந்தி இரண்டுமே சிறுசு முதல் பெரியவர் வரை உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் பாடாய் படுத்துகிறது. 

இன்றைய நவீன கால கட்டத்தில், தொப்பை மற்றும் தொந்தி இரண்டுமே சிறுசு முதல் பெரியவர் வரை உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் பாடாய் படுத்துகிறது. அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும். தொப்பைக்கு முக்கியக் காரணமாக, நாம் சாப்பிடும் உணவுப் பழக்கம் இருக்கிறது. மேலும், மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டை அதிகம் உட்கொள்வது, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை காரணமாக இருக்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உடலில் சேரும் கொழுப்பை கரைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு உங்களின் சீரற்ற வாழ்க்கை முறை 50 சதவீதம் முக்கிய காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, உங்களுடைய வாழ்கை முறையில் மாற்றத்தை கொண்டு வருவது அவசியம். 

புகைப்பிடித்தல்:

புகைப்பிடித்தலும் தொப்பைக் குறையாமல் இருக்க பக்க விளைவை உண்டாக்கும். புகைப்பிடித்தலும் தொப்பையில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும் என ஆய்வு கூறுகிறது. எனவே புகைப்பிடித்தலை தவிர்த்தல் நல்லது.

மது அருந்துதல்: 

நீங்கள் அதிகம் பீர் குடிப்பவர் எனில் அதுவும் காரணமாக இருக்கலாம். அதில் அதிக கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. எனவே இதை குறைத்தால்தான் அது குறையும்.

தவறான உணவுப்பழக்கம்: 

தொப்பைக்கு நாம் சாப்பிடும் உணவுப் பழக்கமும் முக்கியக் காரணமாக இருக்கலாம். உணவு முறையில் அதிகம் எண்ணெய் சேர்த்த உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் அது உடல் தொப்பையை உண்டாக்கிவிட செய்யலாம். மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டை அதிகம் உட்கொள்வது, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை காரணமாக இருக்கலாம். 
எனவே, இவற்றை தவிர்த்து நிறைவான காய்கறிகள். பழங்கள், குறைந்த கொழுப்பு உணவு, கார்போஹைட்ரேட் என உட்கொள்வது உங்களுக்கு தொப்பையைக் குறைக்க உதவலாம்.

அதிக அழுத்தம்:

மன அழுத்தம் ஒட்டுமொத்த உடல் நலனையுமே பாதிக்கும். அதில் ஏற்கெனவே கொழுப்பால் நிறைந்த தொப்பை இன்னும் பாதிக்கப்படும். எனவே அதன் கொழுப்பு எளிதில் கரையாது. மாறாக கூடுதலாகவும் செய்யலாம். எனவே மன அழுத்ததைக் குறையுங்கள். தொப்பையும் குறைந்துவிடும்.

தண்ணீர் குடிக்காமல் இருத்தல்:

தண்ணீர் போதுமான அளவு அருந்தவில்லை என்றாலும் தொப்பை கரையாது. இதுவும் எதிர் மறையாக தொப்பையை அதிகரிக்கும் என்கின்றனர். எனவே, கண்டிப்பாக நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

தூக்க முறைகளில் மாற்றம்:

தூக்க முறைகளில் மாற்றம் செய்யும் போது இரவு நேரங்களில் நீண்ட நேரம் விழித்திருப்பதன் மூலம் தொப்பை போடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

உடல் எடை குறைய என்று பல குறிப்புகளை பின்பற்றுவதை விட நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சரியான நேரத்தில் சரியான உணவு முறையிலும், குறிப்பிட்ட தூக்கமும், எளிமையான உடற்பயிற்சியும் உங்கள் தொப்பையை கரைத்து தொந்தியில்லாமல் செய்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். 

மேலும், படிக்க Sex secret 7 : காலையில் சுய இன்ப பழக்கம் சரியா? தவறா? மருத்துவ வல்லுநர்கள் சொல்லும் தகவல்..!!