ரீசார்ஜ் செய்ய தேவையில்லை..! "மாஸ் சலுகை" அறிவித்தது ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல்..!

ஊரடங்கு  உத்தரவால் பொருளாதார பிரச்சனையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஊரடங்கு  உத்தரவால் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளன.

இது குறித்து ஏர்டெல், தலைமை அதிகாரி சஷ்வந்த் சர்மா (மார்க்கெட் பிரிவு ) தெரிவிக்கும் போது ...

ஊரடங்கு உத்தரவால், வேலைக்கு செல்ல முடியாமல், பொருளாதார ரீதியில் பின்தங்கி வருமானம்  இல்லாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ஏதுவாக ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்து உள்ளது. 

அதன் படி, 8 கோடி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீபெய்டு பேக் முடவடையும் காலத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்கம்மிங் அழைப்புகளை தடையின்றி பெறமுடியும் என்பது  குறிப்பிடத்தக்கது. இது  தவிர 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படுகிறது. இதனை அவசர அழைப்புகள், குறுஞ்செய்திக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு  உள்ளது 

இதே போன்று மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், ஏப்ரல் 20ந் தேதி வரை, ப்ரீ பெய்டு காலத்தை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து உள்ளது.