Asianet News TamilAsianet News Tamil

"எனக்கு எய்ட்ஸ் இருக்கு" கல்யாண பெண் வீட்டுக்கு போன் செய்த மாப்பிளை..! பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வரும் கிரண் குமார் என்ற நபருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெண் பார்த்து வந்துள்ளனர். 

a groom said lie to avoid marriage that he is having hiv
Author
Chennai, First Published Dec 13, 2019, 4:26 PM IST

"எனக்கு எய்ட்ஸ் இருக்கு" கல்யாண பெண்  வீட்டுக்கு  போன்  செய்த மாப்பிளை..! பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ஒரு பொய் சொல்லி திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ள மாப்பிள்ளை பற்றிய விஷயம் உங்களுக்கு தெரியுமா?

கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வரும் கிரண் குமார் என்ற நபருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இவரது திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மிகவும் தீவிரமாக பெண் பார்த்து அவருக்கு எப்படியும் திருமணம் செய்து முடிக்க வேண்டும் என பெற்றோர்கள் எண்ணினர். இதற்கு அடுத்தபடியாக டிசம்பர் 1ஆம் தேதி இவருக்கு திருமணம் நடத்த பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. 

a groom said lie to avoid marriage that he is having hiv

இந்த நியையில், கிரண் எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என முடிவு செய்து ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன்படி பெண் வீட்டுக்கு போன் செய்து தனக்கு எச்ஐவி நோய் இருப்பதாகவும் உங்கள் பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டால் அந்த கொடிய நோய் உங்கள் பெண்ணிற்கும் வரும் என தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பெண் வீட்டார், திருமணத்தை தள்ளி வைப்பதாக தெரிவித்து, ஏன் எதற்கு என விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு hiv  இல்லை என தெரிய வந்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் இப்படி பொய் சொல்ல வேண்டுமென குடைந்து குடைந்து கேட்டனர். அப்போது எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. வலுக்கட்டாயமாக எனக்கு திருமணம் செய்து வைக்க பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நான் எனக்கு எச்ஐவி உள்ளது என தெரிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

a groom said lie to avoid marriage that he is having hiv

இவருடைய இந்த பதிலை கேட்டு கோபமான பெண்வீட்டார் காவல் நிலையத்தை அணுகி அவர் மீது புகார் அளித்தனர். பின்னர் கிரணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அவைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios