"பிரதமர்" உட்படஅனைத்து எம்பிக்களுக்கும் 30 % ஊதியம் பிடித்தம்! மத்திய அமைச்சரவை அதிரடி !

கொரோனா எதிரொலியால் தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தினக்கூலி வேலை செய்பவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு இது மேலும் பெரும் துயரமாக மாறி உள்ளது.

அதே வேளையில் மத்திய மாநில அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் படி விலையில்லா பொருட்களை ரேஷன் அட்டைதாரராகளுக்கு  வழங்கியும், 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நாடு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை பி.எம் கேர்ஸ் -கு அனுப்ப பிரதமர் கேட்டு இருந்தார். அதன் படி பாலிவுட் நட்சத்திரமான அக்ஷய் முதல் மாபெரும் தொழில் நிறுவனமான ரிலையன்ஸ், ரத்தன் டாடா உட்பட  பல நிருவனங்கள் நிதியுதவியை கோடி கணக்கில் வழங்கியது.

இந்த நிலையில் பிரதமர் உட்பட உட்பட அனைத்து எம்.பிக்களுக்கு 30% ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டம் முடிவு செய்து உள்ளது. அதன் படி, குடியரசுத் தலைவர்,துணை குடியரசுத் தலைவர், அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பிக்களின் ஊதியம் 30% பிடிக்கப்படும் என்றும் ஊதியம் குறைப்பு ஓராண்டுக்கு இருக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார் 

ஊதியம் குறைப்பு, தொகுதி நிதி நிறுத்தம் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சமாகும். கொரோனாவால் மகாராஷ்டிரா, தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்து உள்ளார்.