12 ராசியினரில் யாருக்கு நட்பு வட்டம் விரிவடையும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

விஐபிகள் பலர் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்த வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

சிக்கல்களை தீர்க்க நண்பர்களின் ஆலோசனை உங்களுக்கு தேவைப்படும். அவர்களிடமிருந்து உதவியும் கிடைக்க பெரும். செலவு அதிகரிக்கலாம். என பணவரவு இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சுமுகமாக தீர்வு காண்பீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு பிடித்த கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான சில முடிவுகளை எடுத்து காட்டுவீர்கள். பழுதான மின்சார சாதனங்களை சரி செய்து பயன்படுத்துவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...1

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வீட்டு பராமரிப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே....!

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வந்து சேரும். நண்பர்களின் விசேஷங்களுக்கு சென்றுவருவீர்கள். உங்களது நட்பு வட்டம் விரிவடையும்.

துலாம் ராசி நேயர்களே...1

மற்றவர்களிடம் பேசும்போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சொல்ல வருவதை பக்குவமாகச் சொல்ல முற்படுங்கள். நண்பர்கள் வருகையால் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும். 
 
விருச்சக ராசி நேயர்களே..! 

அயல்நாட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.குடும்பத்துடன் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரவு கையில் வந்து சேரும்.

தனுசு ராசி நேயர்களே..!

உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. நண்பர்கள் வருகையால் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

மகர ராசி நேயர்களே..!

பழைய நண்பர்கள் உங்களைத் தேடிவந்து பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களில் பங்குபெறுவீர்கள். சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும்.

கும்ப ராசி நேயர்களே...!

வேலை சுமை சற்று குறையும். ஆரோக்கியம் அழகு நாளுக்கு நாள் அதிகரிக்கும். பெற்றோருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். 

மீன ராசி நேயர்களே..! 

கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அடுத்தவர் விவகாரங்களில்தலையிடாதீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வாயை சற்று அடக்கி வாசிப்பது நல்லது.