Curd Benefits: தினமும் தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா...? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க....
Curd Benefits: தயிரை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்னெ நன்மைகள் இருக்கு என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துவைத்து கொள்வோம்.
நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் படி, தயிர் பெரும்பாலும் மதிய உணவு வேளையில் உண்பது வழக்கம். கால்சியம், வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B12, பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. தயிர் என்பது குளிர்ச்சியான பானமாகும். உடல் சூட்டை தனித்து நமக்கு ஆரோக்கியம் தருகிறது.
தயிரின் நன்மைகள்:
1. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் தயிர் சாப்பிடலாம். தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
2. தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால் மன அழுத்தம், எதிர்மறை சிந்தனைகள் வராது.
3. தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது.
4. தயிரை நேரடியாக தலையில் அப்ளை செய்தாலே பொடுகு, தொற்று, தலை வறட்சி போன்ற பிரச்னைகளை சரிசெய்யலாம்.
இருப்பினும், தயிருடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தயிர் மற்றும் மாம்பழம்:
தயிர் சாப்பிட்ட பின் மாம்பழத்தை சாப்பிடுவது அல்லது இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவது நம் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும்.
எண்ணெயுடன் வறுத்த உணவு:
எண்ணெயுடன் வறுத்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தைக் குறைத்து உடல் உபாதைகளை உண்டாக்கும். மேலும் நம்மை இது சோம்பேறியாக உணர வைக்கும்.
வெங்காயம்:
தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. இந்த இரண்டு எதிர் தன்மைக் கொண்ட உணவை ஒன்றாக இணைத்து சாப்பிடுவது உடல் உபாதைகளை உண்டாக்கும்...