- Home
- Lifestyle
- ஃபேஷன்
- Men's Fashion Tips : ஆண்கள் 'இப்படி' ட்ரெஸ் பண்ணா... எந்த பொண்ணா இருந்தாலும் மயங்கிடுவாங்க!!
Men's Fashion Tips : ஆண்கள் 'இப்படி' ட்ரெஸ் பண்ணா... எந்த பொண்ணா இருந்தாலும் மயங்கிடுவாங்க!!
ஆண்களின் ஃபேஷன் ஸ்டைல் நன்றாக இருந்தால் அவர்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு வரும். இந்தப் பதிவில் நீங்கள் நேசிக்கும் பெண்ணை கவர எப்படி தயாராக வேண்டும்? என காணலாம்.

ஒருவரின் நடை, உடை, பாவனைகள் அவர்மீது கவனம் வரக் காரணமாக இருக்கும். ஒருவருடைய மனதில் இடம்பிடிக்க குணநலன்களை போலவே ஸ்டைலும், பேஷனும் கூட அவசியமாகிறது. உங்களுடைய உடலமைப்புக்கு ஏற்ற ஆடைகள் உங்கள் தோற்றத்தை அழகாகவும், பொருத்தமற்ற ஆடைகள் உங்களை சுமாராகவும் காட்டும். நீங்கள் அணியும் சட்டைகள், ஜீன்ஸ், பேன்ட்கள் உடலுக்கு வசதியாக இருக்க வேண்டும்.
எந்த உடை பொருத்தமானது?
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி ஆடை அணியுங்கள். சாதாரண நாளில் கிளாசிக் டீசர்ட் அல்லது போலோ சட்டை அணியுங்கள். அதற்கு அடர் நிற ஜீன்ஸ் போட்டால் எளிமையாகவும், அட்டகாசமாவும் இருக்கும். ஒரு முறையான நிகழ்வுக்கு போகும்போது விறைப்பான சட்டை, லெதர் காலணிகளை அணியுங்கள். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஆடைகளை தேர்வு செய்யுங்கள்.
கழுத்தில் மெல்லிசான ஜெயினை போடலாம். இது உங்களை நேர்த்தியாக காட்டும். பிரேஸ்லெட் அல்லது வாட்ச் உங்கள் உடைக்கு ஏற்றார்போல அணியுங்கள். இது ஆளுமையை சேர்க்கும். உங்களுடைய வாட்ச், பிரேஸ்லெட் உங்களின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்த உதவும்.
எப்போதும் தலைமுடியை சரியாக வைத்திருக்க வேண்டும். உங்கள் முக அமைப்புக்கு ஏற்ற மாதிரி முடிவெட்டிக் கொள்ளுங்கள். நல்ல ஹேர்கட், சுத்தமான உடைகள், நல்ல சுகாதாரம் உங்கள் மீது நேர்மறையான அபிப்ராயத்தை உண்டாக்கும். மென்மையான வாசனையை தரும் வாசனை திரவியத்தைப் போட்டுக் கொள்ளுங்கள்.
ஆடைகள், வாசனையைத் தாண்டி உங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்துவது தன்னம்பிக்கையுடன் கொண்ட தோற்றம் தான். எப்போதும் நிமிர்ந்த தோற்றத்துடன் இருங்கள். கூன் விழுந்த நிலையை தவிருங்கள். முகத்தில் புன்னகை, நம்பிக்கை வெளிப்படும் தோற்றம் கவர்ச்சிகரமானது. இந்த மாதிரி இருப்பது எந்த உடையிலும் உங்களை அழகாகக் காட்டும்.
நீங்கள் பெண்களை கவர விரும்பினால் உங்களுடைய தோற்றம் கம்பீரமாக, அணுகுமுறை சற்று மென்மையாக இருக்க வேண்டும். பொதுவான நிகழ்ச்சிகளுக்கு ஜீன்ஸுடன் பொருந்தக்கூடிய பிளேஸர் அணிந்து செல்லுங்கள். இது கூர்மையான, மார்டன் லுக்கை தரும்.