இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 26.05.2023
இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 26.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை என கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி ஊழலா?
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் திடீரென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கிறார்.
பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா?
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறும் தேதி துக்க தினமாக அனுசரிக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி என்பது வேறு, மக்கள் நலன் சார்ந்த போராட்ட களம் என்பது வேறு. மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராடுவோம் என்றார்.
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தான் கலந்துகொள்ள உள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
தேவகவுடா
இன்று (மே 26) நடைபெற இருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு
எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, தமாக உள்பட 25 கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்பேற்க உள்ளன.
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (25.5.2023) ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
மு.க.ஸ்டாலின்
கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரிகளில் ஹிஜாப் தடையை நீக்க திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரியங்க் கார்கே
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு.. பலத்த காற்றுடன் மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
வானிலை எச்சரிக்கை
குமரியில் சொகுசுப் படகு சவாரி ஆரம்பம்! படகு இல்லத்திலிருந்து வட்டக்கோட்டை வரை இயக்கம்! அமைச்சர் எ.வ. வேலு கன்னியாகுமரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு சொகுசுப் படகு சவாரியைத் தொடங்கி வைத்துள்ளார்.
குமரியில் சொகுசுப் படகு சவாரி
ஆவினுடன் நாங்கள் ஒன்றும் போட்டிப்போடவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுக்குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 100 சதவீதம் ஆவினுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. ஆவினைவிட கூடுதலாக கொள்முதல் விலை கொடுக்க மாட்டோம். அமுல் வெளிப்படை தன்மையுடன் செயல்படும்.
அமுல் நிறுவனம் விளக்கம்
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி தனது திறமையின்மையை அரவிந்த் கெஜ்ரிவால் மறைத்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார்.
அஜய் மக்கன்