Asianet News TamilAsianet News Tamil

என்ன ஆவினுடன் நாங்கள் போட்டியா? விளக்கம் அளித்த அமுல் நிறுவனம்!!

ஆவினுடன் நாங்கள் ஒன்றும் போட்டிப்போடவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

we didnt competing with aavin says amul
Author
First Published May 25, 2023, 6:14 PM IST

ஆவினுடன் நாங்கள் ஒன்றும் போட்டிப்போடவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுக்குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 100 சதவீதம் ஆவினுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. ஆவினைவிட கூடுதலாக கொள்முதல் விலை கொடுக்க மாட்டோம். அமுல் வெளிப்படை தன்மையுடன் செயல்படும். 10 நாட்களுக்கு ஒரு முறை பால் கொள்முதல் பணம் வழங்கும். இடைத்தர்கர்கள் மூலமாக பால் வாங்க மாட்டோம். ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை.

இதையும் படிங்க: ஆவின் மீது முதல்வருக்கு திடீர் பாசம் ஏன்? அறிக்கை விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை

ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது. ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையான என்ன நிர்ணயம் செய்துள்ளதோ, அதே விலைக்கு மட்டுமே அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும். ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் பால் வழங்குவரும் நபர்கள் அமுல் நிறுவனத்துக்கு பால் வழங்க வேண்டும் என்றால், ஆவின் நிறுவனத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இதையும் படிங்க: “சாராயக்கடை சந்து” திருச்சியில் தெருவுக்கு சர்ச்சை பெயர் சூட்டிய அதிகாரிகள்

எனவே ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆவின் பால் கொள்முதல் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios