டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி தனது திறமையின்மையை அரவிந்த் கெஜ்ரிவால் மறைத்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி தனது திறமையின்மையை அரவிந்த் கெஜ்ரிவால் மறைத்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார். டெல்லியின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், மாநில அரசுக்கு மத்திய அரசு உரிமை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது.
இதையும் படிங்க: இரவில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் போர் விமானத்தை தரையிறக்கி இந்திய கடற்படை சாதனை
மேலும் முழு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசை மீது குற்றம்சாட்டியது. ஆம் ஆத்மி தலைவர்களுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி தனது திறமையின்மையை மறைத்து வருகிறார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சர்ச்சை.. காங்கிரஸ் எதிர்ப்புக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?
கடந்த காலங்களிலும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளில் பல முதல்வர்கள் இருந்ததாகவும், பலமாக இல்லாவிட்டாலும், அவர்கள் டெல்லி மாநிலத்தில் பணியாற்றி, நிர்வாகத்தை சிறப்பாக நடத்தினார்கள். ஆனால் இந்த குணம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இல்லை. அவர் தனது தனிப்பட்ட அபிலாஷைகளை மட்டுமே மேம்படுத்த விரும்புகிறார் என்று சாடியுள்ளார்.
