Asianet News TamilAsianet News Tamil

Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை.! திமுகவிற்கு செக் வைக்கும் பாஜக!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

Income Tax raids on houses linked to Minister Senthil Balaji
Author
First Published May 26, 2023, 8:14 AM IST

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை

தமிழக அமைச்சர்களில் முக்கிய அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை பொறுப்பை வகித்து வருகிறார். டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாகவும், டாஸ்மாக் பாட்டில்களுக்கு உரிய வரி கட்டாமல் விறகப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்திருந்தனர்.

Income Tax raids on houses linked to Minister Senthil Balaji

அரசு ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 100 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அரசு ஒப்பந்ததார்கள் மூலமாக வரி ஏய்ப்பு செய்து வருவாய் ஈட்டியாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

டாஸ்மாக் கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி ஊழலா? அவதூறு பரப்பிய கிருஷ்ணசாமி.. ஆக்‌ஷனில் இறங்கிய செந்தில் பாலாஜி.!

Follow Us:
Download App:
  • android
  • ios