Asianet News TamilAsianet News Tamil

ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான் அறிவு அல்ல.. மீண்டும் நிரூபித்த வளையல் விற்கும் பெண்.. வைரல் வீடியோ..

கோவாவில் உள்ள வகேட்டர் கடற்கரையில் வளையல் விற்கும் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

This Bangle Seller from Goa has charmed the internet with her Flueng english viral video Rya
Author
First Published Feb 5, 2024, 10:17 AM IST

நாட்டின் மிக பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவா திகழ்கிறது. கோவா மாநிலம் ஆண்டு முழுவதும் உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் கோவாவில் உள்ள அழகான வகேட்டர் கடற்கரையில் வளையல் விற்கும் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் சுஷாந்த் பாட்டீல் என்ற நபர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் வளையல் விற்கும் பெண் ஒருவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதை பார்க்க முடிகிறது. கொரோனாவுக்கு பிறகு கோவா கடற்கரையின் மாற்றம் குறித்த தனது கருத்துகளை அந்த பெண் சரளமாக ஆங்கிலத்தில் தெரிவிக்கிறார்..

 

கறுப்பு பாறைகள் மற்றும் அழகிய நீருக்கு பெயர் பெற்றது வாகடர் கடற்கரை, கோவாவின் அதிக நெரிசலான கடற்கரைகளுக்கு மத்தியில் அமைதியான இடத்தை தேடும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட காலமாக புகலிடமாக இருந்து வருகிறது. அந்த வீடியோவில், பெண் வளையல்கள் மற்றும் மணிகள் கொண்ட நெக்லஸ்களை விற்கிறார். கடற்கரையின் மாறும் நிலப்பரப்பை வீடியோவில் ஆங்கிலத்தில் சரியாக விவரிக்கிறார்.

இமாச்சலில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்

இந்த வீடியோவுக்கு கமெண்ட்களும், லைக்களும் குவிந்து வருகின்றன். 828,000 க்கும் மேற்பட்ட லைக்களையும்  பல கருத்துகளையும் குவித்துள்ளது. அந்த பெண்ணின் ஆங்கில மொழிப் புலமையால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் தங்கள் வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடற்கரையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விவரிக்கும் அந்த பெண்ணின் ஆங்கில திறனை பலரும் பாராட்டி வருகின்றனர். தங்களை விட அந்த பெண் நன்றாக ஆங்கிலம் பேசுவதாகவும், தங்களுக்கு கல்வி மீது சந்தேகம் வருவதாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான் அது அறிவு இல்லை என்பதை இந்த பெண் மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு.. சம்பாய் சோரன் அரசு தனது பெரும்பான்மைய நிரூபிக்குமா?

Follow Us:
Download App:
  • android
  • ios