ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு.. சம்பாய் சோரன் அரசு தனது பெரும்பான்மைய நிரூபிக்குமா?

ஜார்கண்ட் சட்டபேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

Jharkhand trust vote: Big test for Champai Soren government Rya

சட்டவிரோத பணப்பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து கடந்த முதன்முறையாக அவரிடம் வீட்டிலேயே வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் 28,29 ஆகிய தேதிகளில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இதையடுத்து கடந்த 27-ம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற ஹேமந்த் சோரன் அங்கிருந்து ஜார்கண்டிற்கு ரகசியமாக திரும்பினார். அவர் தனி விமானத்தில் வராமல் தனி காரில் ராஞ்சிக்கு திரும்பியதால் அவர் தலைமைறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் 2 நாட்கள் கழித்து அவர் தனது அமைச்சர்கள் மற்றும் ஆதரவு எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். 

குற்றங்களுக்கு எல்லை தாண்டிய சவால்கள் இருக்கு.. நீதித்துறை மாற வேண்டும்..அமித்ஷா பேச்சு..!

ஹேமந்த் சோரன் கைது

இதை தொடர்ந்து கடந்த வாரம் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்தனர். இந்த சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை கைது செய்தனர். முன்னதாக ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிததை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனின் அளித்தார். 

புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு

இதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த 1+-ம் தேதி ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்த சம்பாய் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு நேற்று நள்ளிரவில் அழைப்பு விடுத்தார். எனினும், 10 நாட்களில் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து கடந்த 2-ம் தேதி சம்பாய் சோரன் ஜார்கண்டின் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. உள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.. முன்னாள் முதல்வர் ஹேமந்த் கைது செய்யப்பட்டாலும், சிறப்பு நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி வழங்கியது. 

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் பயணியிடம் கைவரிசை காட்டிய ஆசாமி

81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு சிபிஐ(எம்எல்)(எல்) சட்டமன்ற உறுப்பினரின் வெளிப்புற ஆதரவும் உள்ளது.எதிர்க்கட்சியில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் சிபிஐ(எம்எல்)( எல்) தலா ஒரு எம்.எல்.ஏவும் மற்றும் மூன்று சுயேச்சைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios