- Home
- இந்தியா
- India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போகலாம்!" - IRCTC செம பிளான்!
India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போகலாம்!" - IRCTC செம பிளான்!
India-Nepal Train: இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு 'பாரத் கௌரவ்' என்ற புதிய சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் டிக்கெட் விலை, பயணத்திட்டம் மற்றும் பிற விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
16

Image Credit : stockPhoto
இந்தியா-நேபாளம் புதிய ரயில்
இந்திய ரயில்வேயின் சுற்றுலா கழகம் (IRCTC) இந்த புதிய ரயில் சேவையை அறிவித்துள்ளது. இந்த பாரத் கௌரவ் ரயில், இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கிறது. இதன் மூலம் புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு எளிதாக செல்லலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source

26
Image Credit : ANI
பசுபதிநாத் கோயில்
நேபாளத்தின் புகழ்பெற்ற பசுபதிநாத் கோயில் உட்பட பல முக்கிய இடங்களுக்கு இந்த ரயில் மூலம் செல்லலாம். ஹோட்டல் தங்குமிடம், உணவு, சிற்றுண்டி என அனைத்து செலவுகளையும் இந்திய ரயில்வேயே கவனித்துக் கொள்ளும். டிக்கெட் புக் செய்தால் போதும், மற்றவை எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
36
Image Credit : X
10 நாட்கள் சுற்றுலா
இந்த சிறப்பு சுற்றுலா ரயில் பயணம் 9 இரவுகள் மற்றும் 10 பகல்களைக் கொண்டது. ஜூன் 12 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் ரயில் நிலையத்திலிருந்து பயணம் தொடங்கும். இந்தூர், உஜ்ஜைனி, போபால், ஷுஜால்பூர், நரசிங்பூர் உட்பட 10 ரயில் நிலையங்களில் பயணிகள் ரயிலில் ஏறலாம்.
46
Image Credit : gemini
நேபாளத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்
இந்த ஆன்மிக சுற்றுலா ரயில், நேபாளத்தின் முக்கிய இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும். கோயில்களில் தரிசனம், சுற்றுலாத் தலங்களில் ரோப்வே சவாரி, சஃபாரி போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படும். பயணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நேபாளத்தின் முக்கிய இடங்கள்: காத்மாண்டு, பசுபதிநாத் கோயில், பொக்காரா, சித்வான் தேசியப் பூங்கா, மனகாமனா கோயில் என பல்வேறு இடங்களுக்கு உங்களால் செல்ல முடியும்.
56
Image Credit : X
பயணிகளுக்கு சிறப்பு வசதிகள்
பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள்: வசதியான ரயில் பயணம், தங்குவதற்கு 3-நட்சத்திர ஹோட்டல், சைவ உணவு, உள்ளூர் இடங்களுக்குச் செல்ல ஏசி பேருந்து, பயணக் காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி, மற்றும் பாதுகாப்பு.
66
Image Credit : IRCTC tourism
இந்தியா-நேபாளம் கௌரவ் ரயில் டிக்கெட் விலை
இந்த பாரத் கௌரவ் ரயிலில் மூன்று விதமான டிக்கெட்கள் உள்ளன. 14 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஃபர்ஸ்ட் ஏசி, செகண்ட் ஏசி, மற்றும் தேர்ட் ஏசி வகுப்புகள் இருக்கின்றன. கட்டண விவரம்: தேர்ட் ஏசி கம்ஃபர்ட்: ₹62,710, செகண்ட் ஏசி டீலக்ஸ்: ₹76,550, ஃபர்ஸ்ட் ஏசி சுப்பீரியர்: ₹90,400.
Latest Videos

