MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Kerala Politics: பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்! சுகாதார ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! முதல்வர் அதிரடி!

Kerala Politics: பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்! சுகாதார ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! முதல்வர் அதிரடி!

Kerala CM VD Satheesan: கேரளத்தின் புதிய முதல்வராக காங்கிரஸின் வி.டி. சதீசன் பதவியேற்ற நிலையில், பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷா பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : May 18 2026, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கேரளத்தின் புதிய முதல்வர் V.D. சதீசன்
Image Credit : Asianet News

கேரளத்தின் புதிய முதல்வர் V.D. சதீசன்

கேரளம் சட்டப்பேரவை 2026 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துது. காங்கிரஸ் 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. கேரளம் காங்கிரஸ் (Joseph)7 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் V.D. சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம்
Image Credit : Asianet News

பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம்

பதவியேற்றவுடன் UDF அரசின் இரண்டு முக்கிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என கேரள முதல்வர் V.D. சதீசன் அறிவித்துள்ளார். அதாவது ஜூன் 15 முதல், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகமான KSRTC பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்தார். முதியோர்களுக்காக ஒரு தனித்துறை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆஷா பணியாளர்களுக்கு சம்பள உயர்வு

மேலும், ஆஷா பணியாளர்களின் ஊதியம் 3000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு 1000 ரூபாயும், சமையல் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். ப்ரீ-பிரைமரி ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்களுக்கும் 1000 ரூபாய் ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிநிலைமை மேம்படும்போது மேலும் உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்த முதல்வர் வி.டி.சதீசன் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Related Articles

Related image1
'கேரளம்' ஆகும் கேரளா! மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
Related image2
மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. முழு விவரம் உள்ளே!
33
அனைத்து ‍பேருந்துகளும் இலவசமா?
Image Credit : Asianet News

அனைத்து ‍பேருந்துகளும் இலவசமா?

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொண்டனர். இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற தொடங்கியுள்ளன. அந்த வகையில் தான் கேரளத்திலும் தேர்தலுக்கு முன்பாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி இந்த வாக்குறுதியை அளித்து இருந்தது. இப்போது பதவியேற்ற முதல் நாளிலேயே இந்த திட்டம் ஜூன் 15ம் தேதி செயல்படுத்தப்படும் என்று முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்து பெண்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.

தமிழகத்தில் சாதாரண நகரப் பேருந்துகளில் (Ordinary Town Buses) மட்டுமே பெண்களுக்கு இலவசம் வழங்கப்படுகிறது. அதே போன்ற ஒரு நடைமுறைதான் கேரளாவிலும் பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண (Ordinary), சிட்டி/டவுன் (City/Town), மற்றும் சுவிஃப்ட் சாதாரண (KSRTC-SWIFT Ordinary) பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படும். விரைவு பேருந்துகள் வகையில் வரும் Fast Passenger, Super Fast, Express, AC Low Floor, SWIFT Hybrid/Sleeper என புறநகர், தொலைதூர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதி அளிக்கப்படாது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கேரளா
பெண்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Price Hike: சிலிண்டர் விலை ரூ.18 உயரப் போகுதா? சாமானியர்களுக்கு அடுத்த ஷாக்!
Recommended image2
OYO Rules : கல்யாணம் ஆகாத ஜோடி OYO ரூமில் தங்குவது குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது?
Recommended image3
Indian Railways: ரயிலில் லக்கேஜ் தொலைந்தால் ரயில்வே இழப்பீடு தருமா? இந்த விதி உங்களுக்குத் தெரியுமா?
Related Stories
Recommended image1
'கேரளம்' ஆகும் கேரளா! மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
Recommended image2
மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. முழு விவரம் உள்ளே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved