MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. முழு விவரம் உள்ளே!

மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. முழு விவரம் உள்ளே!

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு பேருந்தில் இலவசம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாஅன முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 21 2026, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்
Image Credit : AI

மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி (நாளை மறுதினம்) 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க சென்னை, கோவை என பல்வேறு நகரங்களில் இருந்து படையெடுத்து செல்வார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டணமின்றி பயணம் செய்யலாம் என தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்தில் இலவசம்
Image Credit : Getty

மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்தில் இலவசம்

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், '60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் பயணம் செய்யும்போது ஏதேனும் வயது சான்று மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களை அளிக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டினை நடத்துநரிடம் பெற்று பயணம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் UDID Card மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டினை பெற்று பயணம் செய்யலாம்.

தேர்தல் நாள் மட்டும் இலவசம்

23.04.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெறுவதை முன்னிட்டு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். தேர்தல் நாள் மட்டும் இது பொருந்தும்' என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.. வீடு தேடி வரும் குழு.. சூப்பர் அறிவிப்பு!
Related image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
33
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Image Credit : Asianet News

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 மதியம் 1 மணி வரை ஒட்டுமொத்தமாக 10,663 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஏப்ரல் 21 (இன்று) முதல் நாளில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,404 சிறப்புப் பேருந்துகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 3,496 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஏப்ரல் 22 (நாளை) இரண்டாம் நாள் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கமான 2,092 பேருந்துகளுடன் மிக அதிக அளவாக 3,570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அன்று மட்டும் மொத்தம் 5,662 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்.

ஏப்ரல் 23 (நாளை மறுநாள்) தேர்தல் தினமான அன்று மதியம் 1:00 மணி வரை மட்டும் 905 வழக்கமான பேருந்துகளும், 600 சிறப்புப் பேருந்துகளுமாக மொத்தம் 1,505 பேருந்துகள் இயக்கப்படும் எனத் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் மொத்தம் 5,089 வழக்கமான பேருந்துகளும், கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 10,663 முறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
மூத்த குடிமக்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPS: மனம் தளர வேண்டாம்! துரோகிகளின் எண்ணம் ஈடேறாது! எல்லாத்தையும் நான் பார்த்துகொள்கிறேன்.. சீனாக சீனுக்கு வரும் இபிஎஸ்..
Recommended image2
Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.. வீடு தேடி வரும் குழு.. சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved