மும்பையில்  உள்ள பொறியில் கல்லூரியில் சாதனா என்ற பெண் படித்து வருகிறார். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வரும் சாதனாவுக்கு , வெரோனிக்கா என்ற ஆசிரியை பழக்கமாகியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மும்பை  டாடா புற்றுநோய் மருத்துவமனையில்  தனது தாய் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வெரோனிக்காவை முதல் முறையாக சாதனா பார்த்துள்ளார்..

இதனைத்தொடர்ந்து செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்ட இருவரும் நட்பாக பழகி வந்தனர்.  இந்நிலையில் சம்பவத்தன்று தனியாக வீட்டிலிருக்கும் போது வந்த வெரோனிக்கா அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

மேலும் கடந்த ஜென்மத்தில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறியுள்ள வெரோனிக்கா, தனது ஆசைக்கு இணங்கும்படியும் சாதனாவை  வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி  சாதனா கூச்சலிட்டத்தை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், பல நம்பர்களிலிருந்து தொடர்ந்து வெரோனிக்கா மாணவிக்கு தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து வெரோனிக்காவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு ஆசிரியர் என்றும், போன ஜென்மத்தில் தானும் அந்த மாணவியும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வெரோனிக்காவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.