ரயில்களில் சைட்-லோயர் இருக்கைகளில் இருக்கும் வசதி: பலருக்கும் தெரியாத ஆப்ஷன்!
ரயில்களில் சைட் லோயர் இருக்கைகளில் இருக்கும் பலருக்கும் தெரியாத வசதி குறித்து தெரிந்து கொண்டு இனி ஜாலியாக பயணிக்கலாம்
இந்திய ரயில்வே நமது நாட்டின் லைஃப் லைன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்தியாவில் விதவிதமான பயணங்கள் இருந்தாலும், பயணங்களைப் பொறுத்தவரை, ரயில் பயணங்களே முதலிடத்தைப் பெறுகின்றன. இதற்கு காரணம் மலிவு விலையில், பாதுகாப்பான உற்சாகமான பயணத்தை ரயில்கள் தருகின்றன.
ரயில் பயணங்கள் நிச்சயமாக ஒரு அற்புதமான மகிழ்ச்சியான சந்தர்ப்பம் என்றாலும், அதனை மேலும் ரம்மியமாக்குவது நமக்கு கிடைக்கும் இருக்கைகளே. குறிப்பாக, சைட் லோயர் பெர்த் சீட் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என பலரும் விரும்புவர். காரணம், நன்றாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வரலாம். உறங்கும்போது, இரண்டு சீட்களையும் இழுத்து போட்டு தாரளமாக படுத்து உறங்கலாம், நடுவில் இருக்கை இருக்காது என்பதால், காலை நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு ரிலாக்ஸாக பயணம் மேற்கொள்ளலாம்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!
இந்த இருக்கைகள் RAC இடங்களாக சிலருக்கு கிடைக்கும். அப்போது, அவை 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 2 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். சைட் அப்பர் இருக்கை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். ஆனால் சில சமயங்களில் இந்த சைட் லோயர் இருக்கைகள் RAC இல்லா விட்டாலும் பயணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
இருப்பினும், அதில் பயணம் செய்வது சிலருக்கு சற்று கடினமாக இருக்கும். ஏனென்றால் இரு இருக்கைகளை ஒன்றாக இணைக்கப்படும் போதும், அதன் நடுவில் இருக்கும் கேப் உறங்கும்போது சிலருக்கு அசௌகரியமாக இருக்கும். இந்த சிரமங்களை போக்க சைட் லோயர் பெர்த் சீட்டுக்கு அருகிலேயே ஒரு நீளமான மெத்தை வைக்கப்பட்டுள்ளத. இரு இருக்கைகளை ஒன்றாக இணைத்து அதற்கு மேல் அந்த மெத்தையை போட்டு சவுகரியமாக படுத்து உறங்கலாம். ஆனால், இந்த வசதி சில ரயில்களில் உள்ளன, சில ரயில்களில் இல்லை என்பதால், அனைத்து ரயில்களிலும் இந்த வசதியை கொண்டு வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, கடந்த 2020ஆம் ஆண்டிலேயே அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், சைட் லோயர் பெர்த் அருகே இருக்கும் இந்த மெத்தை தொடர்பாக ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளதையடுத்து, மீண்டும் அது வைரலாகி வருகிறது.