முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க இடைக்கால தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்து உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார். எனவே வழக்கின் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தாமதம் செய்ததற்காக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.

ரூ.2 கோடிக்கு தங்கம் அணிந்திருக்கும் பீடா கடைக்காரர்!

அதன் தொடர்ச்சியாக, பதில் மனுவை நாங்கள் இன்னமும் படித்து பார்க்கவில்லை என கூறி, வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை என்பதால், மே 6ஆம் தேதி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் அதன்பிறகு ஒன்றரை மாதம் வரை செந்தில் பாலாஜி காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.