சுட்டெரிக்கும் வெயில்.. கடும் வெப்பத்தால் காரின் முன்பக்க பம்பர் உருகியதால் அதிர்ச்சி.. வைரல் புகைப்படங்கள்..
டாடா ஹாரியரின் முன்பக்க பம்பர் கடும் வெப்பத்தால் உருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. நாட்டின் பல இடங்களில் வெப்ப அலையை மக்கள் எதிர்கொள்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40°C க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஆனால் அதிகரித்து வரும் வெப்பநிலை மனிதர்களை மட்டுமல்ல, கார்களையும் பாதிக்கிறது. ஆம். உண்மை தான் ட்விட்டரில் வைரல் ட்வீட் அதற்கு சான்றாகும். நாட்டின் வலிமையான எஸ்யுவி கார்களில் ஒன்றாகக் கருதப்படும் டாடா ஹாரியரின் முன்பக்க பம்பர் கடும் வெப்பத்தால் உருகத் தொடங்கியது. இந்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
இதையும் படிங்க : மது விற்பனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட தந்தை.. அதுக்கு மேலே மகன் ஸ்டாலின்.. வச்சு செய்யும் பொன்னுசாமி..!
சவுரவ் நஹாடா என்ற கார் உரிமையாளர் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ 2021 முதல் நான் டாடா ஹாரியர் காரை ஓட்டி வருகிறேன். ஆன்லைனில் பார்த்த நல்ல மதிப்புரைகள் காரணமாக இந்த காரை வாங்கினேன். ஆனால் எனது காரை பெங்களூருவில் 10 மணி நேரம் எனது அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தினேன். பின்னர், காரை எடுக்க வந்தபோது, சூரிய ஒளியால் ஹாரியரின் முன்பகுதி எரிந்ததை பார்த்தேன். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்பக்க கிரில் மற்றும் பம்பர் உருகுவதைக் காணக்கூடிய அதே புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டாடா நிறுவனத்தை டேக் செய்துள்ள அவர், ஏப்ரல் 12 ஆம் தேதி தனது காரை பெங்களூர் வெயிலில் 10 மணி நேரம் நிறுத்தியபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், இப்போது நிறுவனம் சேதத்திற்கு பணம் செலுத்துமாறு கேட்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டாடா நிறுவனம், இந்த பிரச்சனையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதை பார்த்தால், பார்த்து உண்மையிலேயே ஆச்சரியமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியா.? வாய்ப்பே இல்லையென மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி