Asianet News TamilAsianet News Tamil

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியா.? வாய்ப்பே இல்லையென மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

 திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை, ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

Senthil Balaji has said that sale of liquor is not allowed in marriage halls
Author
First Published Apr 24, 2023, 11:50 AM IST | Last Updated Apr 24, 2023, 12:14 PM IST

திருமண மண்டபங்களில் மது விற்பனை

திருமண மண்டபங்கள்  விளையாட்டு, மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம். மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்கள் இதற்கான அனுமதியை வழங்குவார்கள்.ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம்  என தமிழக அரசு சார்பாக. உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்  F.L.2 என்ற லைசென்ஸ்க்கான கட்டணம் விவரங்கள் அந்த அரசிதழில் இடம்பெற்றுள்ளது. இந்த உத்தரவு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். இது தொடர்பாக  கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

Senthil Balaji has said that sale of liquor is not allowed in marriage halls

ஐபிஎஸ் போட்டியில் மது விற்பனை

திருமண மண்டபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் எந்த நிகழ்ச்சிகளிலிலும் மதுபானங்கள் பயன்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது எனவும் தெரிவித்தார்.மேலும் ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்களுக்கு  அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மது விநியோகம் செய்ய அனுமதி பெற்று உள்ளனர் எனவும் கூறினார். 

குறைந்த பட்ச அறிவு கூட இல்லை

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் மின் பயன்பாட்டின் உச்சபட்ச தேவை இருந்தாலும் இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க மின்வாரியம் தயாராக உள்ளது எனவும்  தெரிவித்தார். அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் தொடர்பான கேள்விக்கு பதில அளித்த அவர்,  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்பதற்கும் சொத்து பட்டியலை வெளிவிடுவேன் என்பதற்கு வித்தியாசம் உள்ளது .குறைந்தபட்ச அறிவு கூட  இல்லாமல் அண்ணாமலை வெளியிடப்பட்டுள்ளதாகவும், சொத்துக்கள் அனைத்திற்கும் உரிய  கணக்கு உள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறினார். 

இதையும் படியுங்கள்

உதயநிதியிடம் நான் மன்னிப்பு கேட்கணுமா..! முடியவே முடியாது இறங்கி அடிக்கும் அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios