கேரள பெண் பாலியல் அத்துமீறல் புகார் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ், அந்த பெண்ணின் அடையாளம் உட்பட பல தகவல்களை யூடியூபில் வெளியிட்டார். சர்ச்சை எழுந்த நிலையில் உடனடியாக அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா சிரியன் தேவாலயத்தில்  சில வாரங்களுக்கு முன்பாக, ஒரு நபர் நான்கு பாதிரியார்கள் தனது மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பைக் கிளப்பவே, இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டார் அம்மாநில டிஜிபி. குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரில் பாதிரியார் ஜாப் மேத்யூ மற்றும் ஜான்சன் மேத்யூ ஆகியோர் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜெய்ஸ் கே ஜார்ஜ் மற்றும் ஆப்ரகாம் வர்கீஸ் இருவரும் முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர். இவர்களது முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

 இதன் மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளதால், உரிய உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட பாதிரியார்களைக் கைது செய்யக்கூடாது என்று கேரள மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், அதில், புகார் அளித்த பெண், அவர் வேலை செய்துவரும் பள்ளியின் பெயர், அந்தப் பெண்ணின் கணவர் பெயர், அவர்கள் வசிக்கும் இடம் உள்ளிட்ட பல தகவல்களை வெளிப்படையாகத் தெரிவித்தார். பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இது அமைந்ததால் சர்ச்சை எழுந்த நிலையில், வீடியோ உடனடியாக யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது.

 மேலும், எனக்கு எதிராக, அந்தப் பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் எதுவுமறியாதவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன்” என்று வீடியோவில் பேசியிருந்தார்.  இதன் மூலமாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளிப்படையாகத் தேரிய வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்தப் பெண்ணின் கணவர், ஆப்ரகாம் வர்கீஸ் செய்த செயல் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார். “சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தி, மனிதத்தன்மையற்ற செயலைச் செய்துள்ளார் பாதிரியார் வர்கீஸ். பெண்ணின் தாயையும் அவமானப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், அவருக்கு எதிராகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.