விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தப்படாமல், தாமாக முன்வந்து பெண் ஈடுபட்டால், அது சட்டப்படி குற்றமாகாது என்று ஆமதாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம், இந்திய குற்றவியல் பிரிவு 370ன்படி ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக, உடல்ரீதியாக கொடுமைப்படுத்தி, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது, அடிமைக நடத்துவதுதான் குற்றமாகும். விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவது இந்த பிரிவின் கீழ் கொண்டுவர முடியாது என்றும் நீதிபதிகள் தீர்பப்ளித்தனர்.

சூரத் நகரைச் சேர்்ந்தவர் வினோத் படேல். இவர் கடந்த ஜனவரி மாதம் 3ந் தேதி ஒரு விபச்சார விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு பணம் செலுத்தி, பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க வரிசையில் காத்திருந்துள்ளார். அப்போது போலீசார் திடீர் ரெய்டு நடத்தி, வினோத் படேல் உள்ளிட்ட 5 நபர்களையும், பெண்களையும் கைதுசெய்தனர்.

இதில் வினோத் படேல் மீது ஐ.பி.சி. 370 பிரிவான பெண்களை கடத்துதல், பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதை எதிர்த்து  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வினோத் படேல் வழக்கு தொடர்ந்துஇருந்தார். தன்மீது போடப்பட்டது பொய்யான வழக்கு, இந்த 370 பிரிவு இதில் பயன்படுத்தக்கூடாது, நான் விருப்பத்தின் அடிப்படையில், பணம் செலுத்தி உல்லாசம் அனுபவிக்க காத்திருந்தேன். அதிலும் கைதுசெய்யப்படும் போது ஒரு பெண்ணுடன் என்னை கைது செய்யவில்லை. காத்திருக்கும் போதுதான் கைது செய்தனர், ஆதலால், 370பிரிவில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.பி. பர்திவாலா முன் வந்தது. அப்போது, வழக்கை விசாரணை செய்த நீதிபதி பர்திவாலா, “ நிர்பரயா வழக்கையடுத்து உருவாக்கப்பட்ட பிரிவு 370 என்பது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், வன்கொடுமை செய்தல், அடிமையாக வைத்து இருத்தல் போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த வழக்கில் மனுதாரர், விபச்சார விடுதியில் பணம் செலுத்தி, அங்கிருக்கும் பெண்ணின் விருப்பத்தின் அடிப்படையில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். விபச்சாரத்திலும் இவர் ஈடுபடவில்லை என்கிறார். அதிலும் ஒருபெண் கட்டாயப்படுத்தாமல், துன்பப்படுத்தப்படாமல், விருப்பத்தின் அடிப்படையில் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது குற்றமாகாது. ஆதலால், வினோத் படேல் மீது பதியப்பட்டுள்ள வழக்கு குறித்து மீண்டும் தீர விசாரணயை போலீசார் நடத்த வேண்டும்.அவர் உண்மையில் பணம் செலுத்தி இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.